POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 7

கரன்சி விவகாரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்குக் கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டியதிருக்கும். காரணம் கரன்சி விஷயத்தில் பல காரணிகள் இருப்பதுதான். இந்த இதழில் ஒரு பொருள் ஒரு நாட்டிலும் இன்னொரு நாட்டிலும் விற்கப்படும் விலையைக்கொண்டு கரன்சியின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவது என்பது குறித்துப் பார்க்கலாம்...

ராம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே பைலட் ஆக வேலை பார்க்கிறான். ஜப்பான், சிங்கப்பூர், லண்டன் எனப் பறந்துகொண் டேயிருப்பான். அமெரிக்காவில் பிறந்ததனாலோ என்னவோ அவன் மெக்டொனால்டு பர்கருக்கு அடிமை. அதிலும் பிக்மேக் எனும் வெரைட்டி என்றால் கொள்ளைப் பிரியம். ஒருமுறை அவன் ஹாங்காங் போக நேர்ந்தது. அங்கே இறங்கி ஓட்டலில் செக்இன் செய்துவிட்டு ஒரு வாக் போனான். வழியில் தென்பட்ட ஒரு மெக் டொனால்டு அவுட் லெட்டுக்குள் நுழைந்து, தனது ஃபேவரிட் அயிட்டமான பிக்மேக் பர்கருக்கு ஆர்டர் கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்தால் ஒரு பிக்மேக் 13.30 ஹாங்காங் டாலர் என்றிருந்தது. ராம் ஹாங்காங் ஏர்போர்ட்டில் தன்னிடமிருந்த அமெரிக்க டாலரை மாற்றியபோது ஒரு டாலருக்கு 7.57 ஹாங்காங் டாலர்கள் கொடுத்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிக்மேக் சாப்பிட்டபோது அங்கே விலை 3.54 யு.எஸ். டாலர். அந்தக் கணக்கில் பார்த்தால் ஹாங் காங்கில் பர்கரின் விலை 27.44 ஹாங்காங் டாலராக இருக்கவேண்டும். ஆனால், 13.30 டாலர் என்றுதான் சொல்கிறார்கள். ஒருவேளை மெக்டொனால்டு நிறுவனம் அமெரிக்காவில் அதிக விலைக்கும் ஹாங்காங்கில் குறைவான விலைக்கும் வேண்டுமென்றே விற்கிறதா? சரி, டேஸ்ட்டில் ஏதாவது சூட்சுமம் வைத்திருப்பார்களோ என்று பார்த்தால் அதே டேஸ்ட்தான்! அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.

இந்த விலைப் பிரச்னைக்கு மெக்டொனால்டு காரணமா, கரன்சி எக்ஸ்சேஞ்ச் விலை காரணமா? இந்தக் குழப்பம் உங்களுக்கும் வந்திருக்கும் இல்லையா? இது எப்படி எனப் பார்ப்போம்!

ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது? உதாரணத்துக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொருளை அல்லது சர்வீஸை எந்த அளவுக்கு வாங்க முடிகிறது என்பதைப் பொறுத்துதான் ரூபாயின் மதிப்பு இருக்கும். இதைத்தான் 'பர்ச்சேஸிங் பவர்' என்பார்கள்.

இதே வழியில் ஒரு கரன்சியின் மதிப்பு மற்றொரு கரன்சிக்கு எதிராக எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்...

ராமின் கதையையே எடுத்துக்கொள்வோம்... ஹாங்காங்கில் 13.30 ஹாங்காங் டாலருக்கு பர்கர் கிடைத்து, அமெரிக்காவில் அதே பர்கர் 3.54 யு.எஸ். டாலருக்குக் கிடைக்கிறது என்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஹாங்காங் டாலரின் மதிப்பு (13.30/3.54) 3.76- ஆக இருக்கவேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் ராம் ஹாங்காங்குக்கு டூட்டியில்வந்து பர்கர் சாப்பிட்டு லாபமடையமுடியாது. ஆனால், ராம் ஹாங்காங்கில் இறங்கும்போது டாலருக்கெதிரான ஹாங்காங் டாலரின் மதிப்பு 3.76-க்குப் பதிலாக 7.57 ஆக இருந்தது. அதாவது மார்க்கெட்டில் நடப்பு எக்ஸ்சேஞ்ச் ரேட், பர்ச்சேஸிங் பவரின்படி வரும் மதிப்பை விட கிட்டத்தட்ட 50% அதிகமாக உள்ளது. இன்னும் டெக்னிக்கலாகச் சொன்னால் அமெரிக்கன் டாலருக்கெதிராக ஹாங்காங் டாலர் சுமார் 50% மார்க்கெட்டில் பர்ச்சேஸிங் பவர் மதிப்பை விட குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஹாங்காங்கில் இருந்து ராம் மாதிரி ஒரு பர்கர் பைத்தியம் அமெரிக்கா சென்று பர்கர் வாங்கிச் சாப்பிட நினைத்தால் என்னவாகும்? அவர் 3.76 ஹாங்காங் டாலரை எடுத்துச்சென்றால் அமெரிக்காவில் பர்கர் சாப்பிடமுடியாது. அவர் ஊரில் கிடைக்கும் பர்கர் அமெரிக்காவில் இரண்டு மடங்கு விலையாகிறது.

'லா ஆஃப் ஒன் பிரைஸ்' என்ற ஒரு தியரி என்ன சொல்கிறது தெரியுமா? 'ஒரே மாதிரியான தரம் மற்றும் குணம் உள்ள பொருட்கள் அனைத்தும் உலகெங்கிலும் ஒரே விலையில்தான் விற்கப்படும்!' என்கிறது அந்த தியரி. ராம் அமெரிக்காவிலும் ஹாங்காங்கிலும் விரும்பிச் சாப்பிட்ட பர்கரில் ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே 'லா ஆஃப் ஒன் பிரைஸ்' படி ஒரே விலைதான் இருந்திருக்கவேண்டும்.

'லா ஆஃப் ஒன் பிரைஸ்' தியரி ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீது அப்ளை செய்யப்படும்போது (கமாடிட்டி பேஸ்கட்) 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி தியரி' நமக்குக் கிடைக்கிறது. 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி தியரி' என்ன சொல்கிறது என்றால் இதுபோன்ற விலை வித்தியாசம் வெளிப்படையாக இருக்கும்போது (அதாவது 3.76-க்குப் பதில் 7.57-ஆக இருக்கும்போது) நாளடைவில் அமெரிக்கன் டாலருக்கெதிராக ஹாங்காங் டாலரின் மதிப்பு 7.57-லிருந்து 3.76-க்கு மாறிவிடும் என்கிறது.

மேலே குறிப்பிட்டதைப் போன்ற டாலருக் கெதிரான 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி'-யின்படி வரும் மதிப்பை விட குறைவான மதிப்பை ஒரு கரன்சி அடையும்போது என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.

ஹாங்காங்கிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மிக சீப்பாகிவிடும். உதார ணமாக, ஒரு புத்திசாலி தொழிலதிபர் பர்கரை ஹாங்காங்கில் இருந்து வாங்கி அமெரிக்காவில் விற்றால் அவருக்கு சூப்பர் லாபம் கிடைக்கும். இப்படி அவர் இறக்குமதி செய்யும் பிராசஸில் என்ன நடக்கும்?

அவர் அமெரிக்க டாலரை விற்று ஹாங்காங் டாலர் வாங்குவார்.

அதிகமாக விற்கப்படும் அமெரிக்க டாலர் மதிப்பிழக்கும்.

அதிகமாக வாங்கப்படும் ஹாங்காங் டாலரின் மதிப்பு கூடும்.

இப்படி ஹாங்காங் டாலரின் அமெரிக்க டாலருக் கெதிரான மதிப்பு கூடி, ஒரு டாலரின் மதிப்பு 7.57 ஹாங்காங் டாலரிலிருந்து 3.76-க்கு வந்து நின்றுவிடும் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

இதுபோன்ற விலை மாறுதல்கள் சில நேரங்களில் நிகழாது. எப்போதெல்லாம் என்கிறீர்களா?

1. ஹாங்காங் கவர்ன்மென்ட் கரன்சி மார்க்கெட்டில் புகுந்து வியாபாரம் செய்யும்போது...

2. வேண்டுமென்றே ஹாங்காங் டாலரை விற்று அதன் மதிப்பைக் குறைக்கும்போது...

3. ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் அதிகமாக ஸ்பெகுலேஷன் நடக்கும் வேளையில்...

4. இந்த 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி' மதிப்புக்கும் (3.76), ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் டாலருக்கெதிரான ஹாங்காங் டாலரின் விலைக்கும் (7.57) உள்ள வேற்றுமையும் மீறி, லாங் டேர்ம் முதலீடுகள் அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கை நோக்கி வேக மாகச் சென்றுகொண்டிருக்கும்போது...

5. அமெரிக்கா மற்றும் ஹாங்காங்கின் பொருளாதாரங்கள் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்திக்கும்போது...

'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி' ரியல் ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் மிகவும் பெரிய அளவில் பிராக் டிகலாக உதவாத ஒன்றாக இருப்பினும், இந்த தியரி உலக நாடுகள் குறித்து பொருளாதார ரீதியாக ஆய்வு செய்வதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. முதலாவதாக, இந்த தியரியை வைத்து ஒரு நாட்டின் கரன்சி மற்ற கரன்சிகளை விட ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் அதிக மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறதா என்பதை அறியலாம். இரண்டாவதாக, உலக நாடுகளின் மத்தியில் பொருளாதார ரீதியான ஓர் ஒப்பீடைச் செய்ய இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது.

உதாரணத்துக்கு உலகில் உள்ள 15 நாடுகளின் பொருளாதார அளவை (2001-ம் ஆண்டு ஜி.என்.பி.மதிப்பீடு) பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி மூலமும், மார்க்கெட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் மூலமும் ஒப்பிட்டு (மேலே உள்ள இந்திய பொருளாதாரம் 2001 நிலவரம்) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி ரேட்டில் வேல்யூ செய்தால் இந்தியாவின் நிலைமை உலகின் பொருளாதார வரிசையில் 12-லிருந்து 4-க்கு மாறிவிடுகிறது!

கரன்சியின் விலையில் சம்பந்தப்பட்ட வேறு சில விஷயங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்...







எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

No comments:

Post a Comment