POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 4

ஆல் பாஸ்' பிராண்ட் நோட் புக்கைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது! காரணம் அதன் சூப்பர் குவாலிட்டி! இந்த நோட்டுப் புத்தகங்களைத் தயாரிக்கும் 'ஆர்.சி.என். நோட் புக்ஸ் லிமிடெட்'-ன் எம்.டி. சேகர். அவருக்கு தனது நோட்புக்குகளை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை.

ஒருநாள் துபாயிலிருந்து வந்திருந்த சேகரின் பால்ய நண்பர், நோட்புக்கின் தரத்தைப் பார்த்து விட்டு அசந்து போனார். 'சில சிறிய மாற்றங்களைச் செய்தால் துபாய் மற்றும் அரேபிய நாடுகளில் இதை அடித்துக்கொள்ள நோட்டே இல்லை!' என்று சேகரின் எக்ஸ்போர்ட் ஆசைத் தீயில்பிரீமியம் பெட்ரோலை ஊற்றிச் சென்றார்! நண்பர் சொன்ன மாறுதலைச் செய்யவேண்டும் என்றால் தேவையான அனைத்து மெஷினரியும் புதிதாக இம்போர்ட் பண்ணவேண்டும் என்ற நிலை சேகருக்கு!

பிஸினஸைப் பொறுத்தவரை சேகர் வேகமான ஆசாமி. ஒரே வாரத்தில் ஜப்பான், ஜெர்மன் என பல நாடுகளுக்கு போன் பேசி, மெயில் அனுப்பி, கடைசியில் இரண்டு லட்சம் டாலருக்கு மெஷினை வாங்கிவிடலாம் என கண்டு பிடித்து விட்டார். ரூபாயில் கணக்குப் போட்டுப் பார்த்தபோது சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும் என்று தெரிந்து கொண்டார்.

இதற்கிடையே துபாய்க்குப் போய்ச் சேர்ந்த அவருடைய நண்பரும் ஒரு பெரிய டிஸ்ட்ரிபியூட்டரிடம் சேகருக்கு ஆர்டர் பிடித்துவிட்டார். அந்த கம்பெனி, 'ஒரு டாலருக்கு இரண்டு நோட்டு சப்ளை பண்ணவேண்டும்' என கண்டிஷன் போட்டது. 'குறைந்தபட்சம் இரண்டு வருஷத் துக்காவது சப்ளை செய்வதாக இருந்தால்தான் கான்ட்ராக்ட் தருவோம்' என்று சொல்லிவிட்டது அந்த கம்பெனி. டாலருக்கு 50 ரூபாய் என வைத்துக்கொண்டால் ஒரு டாலருக்கு இரண்டு நோட்டு அனுப்பும்போது என்ன லாபம் கிடைக்கும் என கணக்குப் போட்டார் சேகர். ஒரு நோட்டுக்கு 5 ரூபாய் கிடைக்கும் என வந்தது. எப்படியும் ரெண்டு வருஷத்தில் பிராஜெக்ட் லாபமாகிவிடும். கவர்ன்மென்ட் வேற எப்படியும் கொஞ்சம் சலுகைகள் கொடுப்பாங்க. அதனால் உடனே களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான் என முடிவு செய்து இறங்கியும்விட்டார்.

உடனடியாக ஒரு பிராஜெக்ட் ரிப்போர்ட்டைத் தயார் செய்துகொண்டு பேங்க்குக்குப் போய் கடன் கேட்டார் சேகர். பேங்க் மேனேஜ ருக்கு சேகர் மீது நல்ல அபிப்பிராயம் உண்டு. நல்ல கஸ்டமர் என்ற வகையில் அவரிடம் இந்த எக்ஸ்போர்ட்டில் உள்ள ரிஸ்க்குகள் குறித்து சில விஷயங்களைச் சொன்னார் மேனேஜர்.

''சார் நீங்க ரெண்டு லட்சம் டாலருக்கு மெஷின் ஆர்டர் பண்றீங்க... அது வந்து சேர்றதுக்கு எப்படியும் ஆறு மாசமாகும், புரடக்ஷன் எடுக் கிறதுக்கு நாலு மாசமாகும்னு சொல்றீங்க. அதற்கப் புறம் ரெண்டு வருஷத்துல பிராஜெக்ட் லாபகரமாக நடக்கும்னு கணக்குப் போடுறீங்க. இந்த 34 மாசத்துல டாலர் விலை மேலேயும் கீழேயுமா பல தடவை போகும். அதனால வரக்கூடிய சாதக, பாதகங்களை நீங்க பிராஜெக்ட் ரிப்போர்ட்டில் கணக்கில் எடுத்த மாதிரியே தெரியலையே'' என்றார்.

ஆரம்பத்தில் சேகருக்கு இது சுத்தமாகப் புரிய வில்லை. 'கடன் தர முடியாதுன்னா முடியாதுனு சொல்லுங்க. எதுக்குப் பயமுறுத்துறீங்க' என மேனேஜரை உரிமையாகக் கடிந்துகொண்டார். மேனேஜரோ, சேகரிடம் பொறுமையாக, ''சார் இன் னைக்கு விலையில மெஷினுக்கு ஒரு கோடி ரூபாய் ஆகும். ஆனா, அந்த மெஷின் ஆறு மாசம் கழிச்சு உங்க கைக்குக் கிடைக்கிறப்போ அதே தொகைதான் இருக்கும்னு சொல்லமுடியாது. அன்றைய தேதியில டாலர் 55 ரூபாயா இருந்துச்சுன்னா உங்க மெஷின் விலை ஒரு கோடியே பத்து லட்சமாயிடும். உங்க பிராஜெக்ட் காஸ்ட் 10% அதிகரிச்சுடும். அதேமாதிரி மெஷின் வந்து சேர்ந்து நாலு மாசத்துக்குப் பிறகு புரடக்ஷன் எடுத்து எக்ஸ்போர்ட் செய்வீங்க. அப்போ டாலர் ரேட்டு 40 ரூபாயா ஆயிடுச்சுன்னா நோட்டுக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராது. டாலர் விலை இப்படி ஏறியிறங்கி உங்களோட பிராஜெக் டையே கொலாப்ஸ் செஞ்சிடவும் வாய்ப்பு இருக்கு. ஜாக்கிரதை'' என்றார்.

அப்போதுதான் சேகருக்கு பேங்க் மேனேஜர் சொன்னது கிடுகிடுவென புரிந்தது. ஆனால், அதற் காக நீண்டநாள் கனவான எக்ஸ்போர்ட் ஆசையை விட்டுவிட முடியுமா என்ன!

சென்ற இதழில் சங்கருக்கு செல்லப்பா கிடைத்தது போல சேகருடைய கம்பெனிக்கும் உள்ளூரில் வேறு ஏதாவது கம்பெனிகள் கிடைத்தால் டாலர் விலை ஏற்ற, இறக்கத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு தப்பித்துவிடலாம். ஆனால், அதுபோல் அமைவது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன!

இவர்களுக்காகத்தான் இருக்கிறது கரன்சி மார்க்கெட். பலவிதமான ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் தேவைகளிருக்கும் கம்பெனிகள் இந்த சந்தைக்கு வந்து வியாபாரம் செய்கின்றன. எதிர்வரும் காலத்தில் தங்களுக்குத் தேவையான டாலரையோ, ரூபாயையோ இந்த சந்தையில் வியாபாரம் செய் வதன் மூலம் ஃபிக்ஸ் செய்துகொள்கின்றன. இப்படிச் செய்வதின் மூலம் பிராஜெக்ட்காஸ்ட் டையும், வரவேண்டிய லாபத்தையும் காப்பாற்றிக் கொள்கின்றன.

'சரி, டாலரின் மதிப்பு மாறுது மாறுது என்கிறீர் களே, அது ஏன் மாறுகிறது? அதற்கு என்ன காரணம்?' என நீங்கள் கேட்பது தெரிகிறது. அதுகுறித்து வரும் இதழ்களில் பார்ப்போம்.



எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ்:
ரேஷியோ பார்வர்ட் வித் நாக்அவுட் கண்டிஷன்:

இன்றிலிருந்து 36 மாதத்துக்கு நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் டாலர் 48-க்கு கீழேயிருந்தால் நான் உங்களிடமிருந்து 1 டாலரை 48 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வேன். அதே தேதியில் 48-க்கு மேலே இருந் தால் நீங்கள் எனக்கு இரண்டு டாலர் 48 ரூபாய்க்குக் கொடுக்கவேண்டும். இந்த ஒப்பந்தம் எதுவரை செல்லும் என்றால்...

நாக்அவுட் கண்டிஷன்: டாலர் மதிப்பு 36 மாதத்தில் ஏதாவது ஒரு நாள் 47-ஐ தொட்டால் அன்று முதல் செல்லாது போகும்!

அதாவது, எனக்கு ஒரு ரூபாய்தான் அதிகபட்ச நஷ்டம். ஏனென்றால் 47 ரூபாயைத் தொட்டவுடன் கான்ட்ராக்ட் செல்லாது போகும். ஆனால், உங்களுக்கு டாலர் மதிப்பு 47-க்கு மேல் எவ்வளவு கூடுகிறதோ அந்த அளவுக்கு 36 மாதத்துக்கு இரண்டு மடங்கு நஷ்டமாகும். 'ரூம் போட்டு யோசிப்பாங்களோ, எப்படி ஏமாத்துறதுனு!' என்கிறீர்களா?!




உலகத் தலைநகரம் மும்பை!

இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை வருங்காலத்தில் உலக தலைநகரமாக மாறும் என்று சொல்லி இருக்கிறது ஃபோர்ப்ஸ் இதழ். தொழில்துறையின் வளர்ச்சி, உலகின் பெரிய சினிமா துறை, நடுத்தர மக்களின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி போன்றவை முக்கிய காரணம் என்கிறது இந்த இதழ். பெங்களூரும், ஹைதராபாத்தும் அதன் சாஃப்ட்வேர் வளர்ச்சி காரணமாக உலகின் முக்கிய நகரங்களாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது ஃபோர்ப்ஸ்.




எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

No comments:

Post a Comment