POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 3

கரன்சி சந்தையானது ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், தனிநபர்கள் என எல்லா தரப்புக்கும் பயன்படக்கூடியது என்பதை கடந்த இதழில் பார்த்தோம்... இந்த இதழில் கரன்சியின் விலை மாறுதல் எப்படி ஒரு தனிநபரைப் பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்...

சங்கருக்கு ஒரே பையன்... மிடில் கிளாஸ் ஃபேமிலியாக இருந்தாலும், கடனை உடனை வாங்கி பையனை நன்றாகப் படிக்க வைத்தார். அவனும் படித்து முடித்து வேலை கிடைத்து அமெரிக்கா போய் விட்டான். பையன்தான் நன்றாகச் சம்பாதிக்கிறானே, அவன் பெயரில் ஒரு வீட்டை வாங்கிப்போட்டால் பிற்காலத்தில் அவனுக்கு உதவுமே என்ற எண்ணம் வந்தது சங்கருக்கு! பையனிடம் கேட்டபோது அவன் தன்னால் மாதம் 2,000 டாலர் அனுப்பமுடியும் என்றான். டாலருக்கு ஐம்பது ரூபாய் என்று கணக்கு வைத்தால் மாதம் ஒரு லட்சம் வருகிறது. அதனால் ஒரு லட்சம் மாதத்தவணை வருகிற மாதிரி ஒரு தொகையை வங்கியிலிருந்து கடனாக வாங்கி, மீதிக்கு கைக்காசு, சேமிப்புகளைப் போட்டு சரிக்கட்டி ஒரு வீட்டை வாங்கிவிட்டார் சங்கர்.

முதல் மாசம் பையன் 2,000 டாலர் அனுப்புகிறான். பேங்க்கில் போய்ப் பார்த்தால் ஒரு லட்சத்து நாலாயிரம் ரூபாய் கிரெடிட் ஆகியிருக்கிறது! டாலர் மதிப்பு 52 ரூபாய் ஆகிவிட்டதால் 4,000 ரூபாய் கூடுதாலாக வந்திருக்கிறது. தவணையைக் கட்டிவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பினார் சங்கர்.

அடுத்த மாதம் பேங்க்குக்குப் போய்ப் பார்த்தால் 90,000 ரூபாய்தான் கிரெடிட் ஆகியுள்ளது! என்ன ஏதென்று விசாரித்தால், 'டாலர் 45 ரூபாய் ஆகிவிட்டது, அதனால்தான்' என்றார்கள் பேங்க்கில். 'என்னடா இது, 10,000 ரூபாய் துண்டு விழுகிறதே' எனக் கவலை பிறக்கிறது சங்கருக்கு. அடுத்த மாதம் கரெக்டாக ஒரு லட்சம் கிரெடிட் வருகிறது. 'அப்பாடி தப்பிச்சேன்' என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். ஆனாலும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கிடைக்குமோ என்று தெரியாமல் தவிக்க வேண்டி யதாகிவிடுகிறதே இதற்கு என்ன செய் வது என்ற கவலை வந்துவிட்டது சங் கருக்கு!

பேங்க்கை விட்டு வெளியே வந்த போது அவருடைய நண்பர் செல்லப்பா எதிர்ப்பட்டார். செல்லப்பா தனது பையனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார். அவனு டைய செலவுக்காக மாதாமாதம் 2,000 டாலர் அனுப்பி வருவதாக சங்கரிடம் சொல்கிறார். அவருக்கும் பிரச்னை. பையனுக்குப் பணம் அனுப்பும்போது ரூபாயின் மதிப்பு குறைந்தால் சிலமாதங்கள் கையைக் கடித்துவிடுகிறது.

இரண்டு பேரும் தங்களது பிரச்னையைப் பேசிக்கொண்டிருக்கும்போதே சங்கருக்கு ஒரு பொறி தட்டுகிறது. 'செல்லப்பாவுக்குத் தேவை 2,000 டாலர். நமக்குத் தேவை 1,00,000 ரூபாய். அமெரிக்காவில் தன்னுடைய மகன் செல்லப்பா மகனிடம் 2,000 டாலர் கொடுத்துவிடுவது. இங்கே செல்லப்பாவிடம் தான் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொள்வது. இரண்டு தரப்புக்கும் எந்த ஏற்ற, இறக்கமும் இல்லாமல் கரெக்ட்டான தொகை கிடைத்துக் கொண்டிருக்குமே...'

வீட்டுக்குப் போய் மகனுக்கு உடனே போன் போட்டு இந்த ஐடியாவைச் சொன்னார் சங்கர். ஆனால் பையன், 'அது கூடாது. சட்ட விரோதமான செயல்' என்று சொல்லிவிடுகிறான். சங்கருக்கு ராத்திரி முழுக்க தூக்கமே வரவில்லை. இரவு முழுவதும் யோசித்து கடைசியாக ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டார். அந்த ஐடியா இதுதான்...

செல்லப்பாவுக்கு டாலர் விலை ஏறக்கூடாது. சங்கருக்கோ இறங்கக் கூடாது. அதனால் இன்றைய விலை யில் சங்கரும் செல்லப்பாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இனிவரும் 9 மாதத்துக்கு டாலர் 50 ரூபாய்க்கு மேலே போனால் மகன் அனுப்புவதில் அதிகம் வரும் பணத்தைச் செல்லப்பாவுக்குக் கொடுத்துவிடுவது. 50 ரூபாய்க்குக் கீழே போனால் செல்லப்பா தன்னிடம் மிச்சமாகும் பணத்தைச் சங்கருக்குக் கொடுத்துவிடுவது. ஆக மொத்தத்தில் இரண்டு பேருக்கும் டாலர் ஏறினாலும் இறங்கினாலும் நஷ்டம் கிடையாது.

இந்த ஐடியாவை சங்கர் செல்லப்பாவிடம் சொன்னதும் அவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். அன்றிலிருந்து இரண்டு பேரும் மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் பேங்க்குக்கு ஒன்றாகச் சென்று அன்றைய டாலர் நிலவரத்தை வைத்து வந்த பணத்தையும் அனுப்பவேண்டிய பணத் தையும் கணக்கிட்டு வேலையை முடித்துக் கொள் கிறார்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்...

ஒருவேளை ஒப்பந்தம் போட்ட ஒன்பது மாதத்தில் ஐந்தாறு மாதங்கள் டாலர் மதிப்பு ஐம்பது ரூபாயை விட அதிகமாக இருந்தால் செல்லப்பாவுக்கு சங்கர் அதிகப் பணம் கொடுத்திருப்பாரே. அதுவே ஐம்பது ரூபாயை விட குறைவாக இருந்தால் சங்கருக்கு செல்லப்பா அதிக பணம் கொடுத்திருப்பாரே என்று தோன்றியிருக்கும் அல்லவா?

ஒன்பது மாதம் முடிந்த பிறகு கணக்குப் போட்டுப் பார்த்தால் யாராவது ஒருவர் இன்னொருவருக்கு அதிக பணம் கொடுத்திருக்கத்தான் செய்திருப்பார். ஆனால், அப்படி இந்த கணக்கினைப் பார்ப்பதே தவறு. ஒப்பந்தம் செய்துகொண்டபோது இருவரின் கொள்கை என்ன? எதிர்வரும் ஒன்பது மாத காலத்துக்கு டாலரை 50 ரூபாய்க்குக் குறையாமல் சங்கரும், 50 ரூபாய்க்கு மிகாமல் செல்லப்பாவும் பேங்க்கில் மாற்றிக்கொள்வது என்பதுதான். அது நிச்சயமாக நிறைவேறியதா இல்லையா?

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்... இதுபோன்ற ஒப்பந்தங்கள் லாபம் அடைவதற்காகப் போடப்படுபவை அல்ல. எதிர்கால விலை மாற்றங்களால் உண்டாகக்கூடிய நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகப் போடப்படுபவைதான். எனவே ஒப்பந்த காலம் முடிந்து விலைகள் தெளிவாகத் தெரிந்தபின் லாப-நஷ்டக் கணக்குப் பார்த்து பெருமூச்சு விடக்கூடாது.

சங்கருக்கு அதிர்ஷ்டவசமாக அதே அளவு தொகைக்கு அதே மாதிரியான பிரச்னைகளுடன் இருந்த செல்லப்பா கிடைத்துவிட்டார். ஆனால், எல்லோருக்கும் அதே போல ஆட்கள் கிடைப் பார்களா? அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பது தான் கரன்சி சந்தை. நிறைய சங்கர்களும் செல்லப் பாக்களும் சந்தையில் இருப்பார்கள். ஆனால், ஒரு வரை ஒருவர் நேரடியாகச் சந்திக்க முடியாது. அது ஒன்றுதான் வித்தியாசம்!

தனிநபர்களுக்கே எதிர்கால விலைமாறுதலால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என் றால் நிறுவனங்கள் எந்த அளவில் பாதிக்கப்படும் எனப் பாருங்கள்... இதுபோன்ற ஒப்பந்தங்கள் நிறுவனங் களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். அதுகுறித்து அடுத்த இதழில் பார்ப்போம்...




எக்ஸாடிக் ஆப்ஷன்ஸ்:

நாக்அவுட்/ நாக்இன் ஆப்ஷன்ஸ்:

இந்த ஆப்ஷனில் கான்ட்ராக்ட்கள் கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைக்கும். எப்படி? இன்றைய டால ரின் மதிப்பு ரூபாய் 50. இன்றிலிருந்து ஒரு வருஷ காலத்துக்கு மாதா மாதம் முதல் தேதி 10,000 டாலரை 50 ரூபாய்க்கு வாங்கும் உரிமை (ஆப்ஷன்) உங் களுக்கு அளிக்கப்படுகிறது. மார்க்கெட்டில் டாலர் விலை 50-ஐ விட மேலேயிருந்தால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 50-ஐ விடக் குறைவாக இருந்தால் வாங்கவேண்டியதில்லை. இந்த ஒப்பந்தத்துக்காக நீங்கள் பிரீமியம் (பணம்) ஒன்றும் தரவேண்டாம்.

ஹை இது நன்றாயிருக்கிறதே! டாலர் விலை 50-க்கு மேல் இருந்தால் லாபம் பண்ணலாமே என நினைக்காதீர்கள்! பின்வரும் கண்டிஷன்களும் இந்த கான்ட்ராக்ட்டில் உண்டு. உங்களுடைய 50 ரூபாய்க்கு டாலர் வாங்கும் உரிமை டாலரின் மதிப்பு 50 ரூபாய் 50 பைசா செல்லும் வரைதான் செல்லுபடியாகும் (நாக்அவுட்). இந்த ஒரு வருஷ காலத்தில் ஏதாவது ஒரு நாள் டாலர் 50.50-ஐ தொட்டால் உங்கள் உரிமை ரத்தாகும். மேலும் டாலர் விலை 50-லிருந்து கீழே யிறங்கி 49.50-ஐ இந்த ஒரு வருடத்தில் தொட்டால் (நாக்இன்). அன்றிலிருந்து நீங்கள் நான் (என்னுடைய ஆப்ஷன்) கொடுத்தால் 50.50-க்கு மாதா மாதம் 10,000 டாலரை வாங்கிக்கொள்ள வேண்டும். பெட்டு எப்புடி?!

அதாவது நான் 50-லிருந்து 50.50 வரை நஷ் டப்பட ரெடி. அதிகபட்ச நஷ்டம் எனக்கு 0.49 காசு மட்டும் (10,000 டாலர் ஜ் 12 மாதம்) . லிமிட்டெட் நஷ்டம் எனக்கு. ஆனால், நீங்கள் சிக்கினால் 49.50-லிருந்து 35 போனால் கூட 50.50-க்கு 10,000 டாலரை மாதா மாதம் ஒரு வருஷத்துக்கு வாங்கிக் கொண்டே இருக்கவேண்டும் அன்லிமிட்டெட் நஷ்டம் உங்களுக்கு!

No comments:

Post a Comment