POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 2

அட என்ன சார் நீங்க, ஏற்கெனவே வியாபாரம் செய்ய ஷேர், ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ், கமாடிட்டீஸ் ஃப்யூச்சர்ஸ்னு ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்குது... இப்ப கரன்சி பற்றி தெரிஞ்சு என்ன ஆகப்போகுது'' என்று கேட்கிறீர்களா? அதற்கான தேவை வந்துவிட்டது! கரன்சி மார்க்கெட்டில் பல விதமான நோக்கத்துடன் வியாபாரம் செய் யலாம். ஏற்றுமதி செய்பவர், இறக்குமதி செய்பவர், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர், ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்பவர் என பலதரப்பட்டவர்களுக்கும் ஏற்ற இடம் இது! ஒவ்வொருவருக்கும் இது எப்படிப் பயன்படக்கூடும் என்பதை முதலில் பார்க்கலாம்... 

ஏற்றுமதியாளர்



பொதுவாக எல்லா ஏற்றுமதியாளர்களும் அந்நியச் செலாவணியில்தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக ஒருவர் டீ-ஷர்ட்டை 40 ரூபாய்க்குத் தயாரித்து, அமெரிக்க கம்பெனி ஒன்றுக்கு 'ஒரு ஷர்ட் ஒரு டாலர்' என்ற விலைக்கு ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒப்பந்தப்படி மாதம் ஒன்றுக்கு 10,000 டீ-ஷர்ட் வீதம் ஒரு வருடத்துக்கு அவர் அனுப்பவேண்டும். அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 50 ரூபாய் என இருக்கிறது என்றால், அவருடைய லாபம் ஒரு டீ-ஷர்ட்டுக்கு 10 ரூபாய்.

சரக்கு கையில் வந்த பிறகே அமெரிக்க கம்பெனி பணத்தை அனுப்பும். அவரும் மாதாமாதம் டாலரைப் பெற்று அதனை ரூபாயாக மாற்றச் சென்றால் அன்றைய டாலரின் மதிப்பில்தான் மாற்ற முடியும். அவர் ஒப் பந்தம் போட்ட சமயத்தில் உள்ள டாலரின் மதிப்புக்கும், டாலரை ரூபாயாக மாற்றப்போகும் சமயத் தில் உள்ள மதிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் டாலரின் மதிப்பு கூடினால் ஏற்று மதியாளருக்கு லாபம். குறைந்தால் நஷ்டம்! இதனால், ஏற்றுமதியாளரின் லாபம் டாலரின் மதிப்பின் போக்குக்குத் தகுந்தாற் போல் மாறிக்கொண்டேயிருக்கும். 

லாபம் கூடிக் குறைந்தால் பரவாயில்லை. சிலசமயம் டாலரின் மதிப்பு அளவுக்கு அதிகமாகக் குறைந்தால் முதலுக்கே மோசமாகிவிடவும் (டீ-ஷர்ட்டின் உற்பத்தி விலைக்குக் கூட கட்டுப்படியாகாமல் போகவும் செய்யும்) சான்ஸ் இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவுடன் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக்மென்டில் அந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் டாலரை ஒரு விலையில் விற்று லாபத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

இறக்குமதியாளர்

இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் இறக்குமதி ஆர்டரை பிளேஸ் செய்யும் நாளுக்கும் பொருள் வந்திறங்கி டாலரில் பணம் கொடுக்கும் நாளுக்கும் இடையே உள்ள காலத்தில் டாலரின் மதிப்பு கூடினால் சரக்கின் விலை அதிகமாகிவிடும். அவ்வாறு சரக்கின் விலை அதிகமாவது லாபத்தைக் குறைத்துவிடும். மிக அதிகமான மதிப்பு யர்வு நடக்கும்போது இறக்குமதி செய்யும் பொருளை விற்க முடியாமல் போய்விடும். இதைத் தவிர்க்க இறக்கு மதியாளர் ஆர்டரை பிளேஸ் செய்தவுடன் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் மார்க்கெட்டில் அந்த ஆர்டரில் உள்ள டாலரை வாங்கி வைத்துக்கொண்டால் அவரால் டாலரின் மதிப்பு மாறுபாட்டின் மூலம் வரும் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும்.

சாதாரண மனிதர்கள்

''அடப் போங்க சார்... நான் ஏற்றுமதியும் செய்யவில்லை, இறக்குமதியும் செய்யவில்லை... எனக்கு எதற்கு இந்த மார்க்கெட்?'' என ஒருவர் கேட்டால் அதற்கும் பதிலிருக்கிறது.

சாதாரண மனிதர்களை ஃபாரெக்ஸூடன் சம்பந்தம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். 

சம்பந்தம் உள்ளவர்கள் என்பது மகன், மகள் என ஃபாரினில் வேலைபார்த்து பணம் அனுப்பும் உறவினர்கள் உள்ளவர்கள். இவர்களை ஏற்றுமதியாளர்களுக்குச் சமமாகக் கருதலாம். ஏனெனில் குறிப்பிட்ட இடைவெளியில் டாலரில் பணம் இவர்களுக்கு வந்துகொண்டிருக்கும். மற் றொருவகை மகன்/மகளை ஃபாரினில் படிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள். இவர்களை இறக்குமதி யாளர்களுக்குச் சமமாகக் கருதலாம். இவர்கள் குறிப் பிட்ட இடைவெளியில் டாலரை வாங்கி மகன்/மகளுக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

சம்பந்தம் இல்லாதவர்கள் ஏன் இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யவேண்டும் எனக் கேட்கிறீர்களா?. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்பவரா? உங்களுக்கும் இதில் சம்பந்தம் உள்ளதே! எஃப்.ஐ.ஐ. முதலீடுகள் எப்படி சந்தை நிலையை மாற்றியமைக்கின்றன? எஃப்.ஐ.ஐ. டாலரில் பணத்தைக் கொண்டுவந்து டாலரை விற்று ரூபாயாக மாற்றி ஷேர்களை வாங்குகின்றன. ஷேரில் லாபம் பார்த்து அவற்றை விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு போகும்போது ரூபாயை விற்று டாலரை வாங்குகின்றன. இதனால் எஃப்.ஐ.ஐ. முதலீட்டுக்கு டாலர் வரும்போது டாலர் மதிப்பு குறைகிறது. அதாவது அதிகமாக டாலர் விற்கப்படுகிறது. ரூபாய் வாங்கப்படுகிறது. அதிகமாக விற்கப்படுவது எந்தச் சந்தையிலும் மதிப்பிழக்கும். அதுபோல அதிகமாக வாங்கப்படும் சரக்கு மதிப்பு பெறும். 

எனவே டாலரில் முதலீடு வரும்போது ரூபாய் மதிப்பு கூடும். முதலீடு திரும்பிச்செல்லும்போது ரூபாயின் மதிப்பு குறையும். எனவே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் எஃப்.ஐ.ஐ. முதலீடு அதிகமாக வரும்போது உங்கள் பங்குகளின் விலை ஏறும். அந்தச் சூழ்நிலையில் ரூபாய் மதிப்பு கூடும். அப்போது டாலரை ஃப்யூச்சரில் குறைந்த விலையில் வாங்கி வைக்கலாம். எஃப்.ஐ.ஐ. முதலீடு வெளியேறும்போது டாலரின் விலை கூடும். அப்போது டாலரை ஃப்யூச்சரில் விற்று சம்பாதிக்கலாம்.

''அட, நான் பங்குச் சந்தையில் கூட முதலீடு செய்யறதில்லீங்க. இனிமே பண்ணலாமானு யோசிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கெதுக்கு சார் இது!'' என்கிறீர்களா? உங்களுக்கும் ஏற்ற சந்தை இதுதான்! ஏனென்றால் டாலர்/ரூபாய் மதிப்பு கண்டபடி ஏறியிறங்குவதில்லை (less volatile). மேலும், கரன்சி ஃப்யூச்சரில் வியாபாரம் செய்ய குறைந்தபட்சம் தேவைப்படும் தொகை 1,000 டாலர் மட்டுமே! அதாவது 48,130 ரூபாய். இதற்கான அதிகபட்ச மார்ஜின் தொகை 4,813 ரூபாய்தான். அதுவே பங்குச் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வியாபாரம் செய்யவேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும்! இன்னொரு விஷயம் பங்குச் சந்தை போல டாலரோ, ரூபாயோ ஏறி இறங்குவது கிடையாது. 

இப்போது சொல்லுங்கள் டாலர்/ரூபாய் ஃப்யூச்சர்ஸ் சந்தையில் வியாபாரம் செய்வது லாபமும் சுலபமானதும் அல்லவா?

சூப்பர் பிக்-அப்..!


கரன்சி டெரிவேட்டிவ்ஸ் வியாபாரம் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் 2008-லும், எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் அக்டோபர் 2008-லும் தொடங்கி நடந்து வருகிறது. தொடங்கிய தேதியிலிருந்து இன்றுவரை கணக்கிட்டால் தினசரி ரூபாய் 4,250 கோடி ஆவரேஜ் வியாபாரம் நடந்து வருகிறது. குறிப்பாகச் சொன்னால் தொடங்கியதில் இருந்து 231 நாட்கள் டிரேடிங் நடந்துள்ளது. இந்த 231 நாட்களில் டாலரின் ரூபாய்க்கு எதிரான மதிப்பு ஸ்பாட் மார்க்கெட்டில் குறைந்தபட்சம் ரூபாய் 43.79 ஆகவும் அதிகபட்சம் ரூபாய் 52.09 ஆகவும் இருந்திருக்கிறது. 

எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ்!

கரன்சி டெரிவேட்டிவ்ஸ் என்றவுடன் ஏற்றுமதியாளர்கள் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங்கில் கடுமையான நஷ்டத்தை அடைந்தார்கள் என சென்ற வருடம் பேப்பரில் படித்தது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அதனால் ரிஸ்க் இதில் அதிகமாக இருக்குமோ எனச் சந்தேகம் வருவது இயல்பே. 

அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த வியாபாரத்தில் பெரும்பான்மையான கான்ட்ராக்ட்கள் ஸ்வாப்ஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ் வெரைட்டியைச் சேர்ந்தது. எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ் என்பது ஒரு கைதேர்ந்த ரிஸ்க் எடுக்கக் தயாரான டிரேடருக்கான விஷயம். எக்ஸாட்டிக் டெரிவேட்டிவ்ஸ் பலவிதம். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்... சுலபமாகப் புரிவதற்காக டாலர்/ரூபாய் கான்ட்ராக்ட்கள் உதாரணமாக்கப்பட்டுள்ளது. டாலர்/ரூபாயில் எக்ஸாடிக் கான்ட்ராக்ட்கள் நடைமுறையில் இல்லை. மற்றும் சட்டப்படி கூடாது. தனிநபர்களாக இந்த கான்ட்ராக்ட்களில் வியாபாரம் செய்வது கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் விழுவதற்குச் சமம். ஆனாலும் இவை ரிஸ்க் டிரேடருக்கான ஒரு சுவையான விஷயம்!

இந்த இதழில் காரிடார் கான்ட்ராக்ட்கள்: உதாரணத்துக்கு இந்த கான்ட்ராக்டை 3,000 ரூபாய் கொடுத்து வாங்குபவருக்கு வாங்கும் தேதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 50-ஐத் தொட்டால் 10,000 ரூபாயும் 38- ஐத் தொட்டால் 5,000 ரூபாயும் விற்பவர் கொடுப்பார். இவை இரண்டும் நடக்காவிட்டால் அந்த கான்ட்ராக்ட்டினை வாங்கக் கொடுத்த தொகை அம்பேல்!

எச்சரிக்கை!

இந்தத் தொடரில் கரன்சி வியாபாரம் எனச் சொல்லப்படுவது அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் அங்கீகாரத்துடன் எம்ஸிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக் மென்ட்டில் நடைபெறும் டாலர்/ரூபாய் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்டையே குறிப்பிடுகிறது. 

ஃபெமா சட்டத்தின்படி கரன்சி ஸ்பாட் மார்க் கெட்டில் அனுமதி பெற்ற ஏற்றுமதி/இறக்குமதிக்கு சம்பந்தமில்லாத இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்தியர் வியாபாரம் செய்யக்கூடாது. எனவே, ஸ்பாட் மார்க்கெட்டில் யாராவது உங்களுக்கு வியாபாரம் செய்து சம்பாதித்துத் தருகிறேன் என்று சொன்னால் நம்பி ஏமாந்துவிடவேண்டாம். இப்படிச் செய்வது சட்டப் படி தடைசெய்யப்பட்டிருப்பதால் உங்களுக்குப் பண நஷ்டம் ஏற்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கைக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்! அதேபோல மேலே குறிப்பிட்டுள்ள பங்குச் சந்தைகளில் வியாபாரம் செய்யும்போதும் அந்த பங்குச் சந்தையின் டிரேடிங் மெம்பர்களிடம் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். 'வேறு இடத்தில் வியாபாரம் செய்து தருகிறேன்' என்று யாராவது சொன்னால் அது தவறு. அந்த மாதிரி வியாபாரத்தில் பணம் போட்டு ஏமாந்து நிற்க வேண்டாம்!




எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

No comments:

Post a Comment