POLICY SERVICE

Sunday, December 26, 2010

பங்கு வர்த்தகம் (டிரேடிங் - Trading)

டிரேடிங் (Trading) என்றால் என்ன ?
டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது - விற்பது அல்லது விற்பது - வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.

பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where should I trade stocks?)
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். உலகளவில் (Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?
இல்லை. பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேராக செல்ல வேண்டியதில்லை. இவ்வர்த்தகம் செய்வதற்க்கென்றே பங்குச்சந்தையால் உரிமம் வழங்கப்பெற்ற பங்குத்தரகர்கள் (Stock Brokers) மூலமாக டிரேடிங் (Trading) செய்யலாம். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் (Investor) பங்குதரகரிடம் ஒரு கணக்கை (Account) தொடங்க வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (What is meant by Online Trading?)
ஆன்லைன் வர்த்தகம், சமீபகாலத்தில் புகழ்ப்பெற்ற வர்தக முறை ஆகும். இம்முறையால் வர்த்தகம் செய்வதற்க்கு, நீங்கள் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பங்குத்தரகரை அனுகாமல், நாம் இணையதளத்தின் (Internet) மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்க்கவோ முடியும்.
நாம் இணையதளத்தில் வர்த்தகம் செய்யும்பொழுது, ஆன்லைன் பங்குத்தர்கரை (Online Stock Broker) தொடர்பு கொள்வோம். ஆன்லைன் பங்குத்தகர் நம் சார்பாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வார். இதனால் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Brokerage fees) செலுத்த வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் என்ன ? (Advantages of Online Trading)
உதாரணத்திற்கு, நீங்கள்  வங்கியில் சேமிப்பு கணக்கு (Savings Account) வைத்துள்ளீர்கள் என்றும் எடுத்துக்கொள்வோம்.  ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு டிமேட் கணக்கு (Demat Account) ஒன்று தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, நீங்கள் வர்த்தகம் செய்வதற்கு தேவையான பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தின் முலம் பெறப்படும் தொகையை சேமிப்பு கணக்கிற்கும் மாற்றிக்கொள்ளலாம்.

டிமேட் கணக்கு (Demat Account) என்றால் என்ன ?
வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வது போல (As like savings account), இதற்கு என்றே இருக்கும் சில நிறுவனங்களிடம் நாம் கணக்கை தொடங்க வேண்டும். அவர்கள் நமக்கு, வங்கி கணக்கெண் போல புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Identity card with photograph) எண் கொடுத்துவிடுவார்கள்.

டிமேட் கணக்கின் பயன்பாடுகள் ? (Use of Demat account)
மேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ விற்கவோ முடியும். இக்கணக்கால்,
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.
  • விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)

சரி, டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (What you need to open demat account)
  • ஏதேனுமொரு அடையாள அட்டை (Identity card). உதாரணத்திற்கு வாக்காளர் அடையாள (Voters ID-card) அட்டை, ஓட்டுனர் உரிமம் (Driver License) போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை பயன்படுத்தலாம் (Ration card).
  • பாண் அட்டை. (PAN Card)

வருமான வரி என்றால் என்ன?

வருமான வரி என்றால என்ன? (What is meant by Income Tax)
இந்தியாவின சட்ட திட்டங்களுக்க(Indian Laws) உட்பட்ட, வருமானம் (Income) பெறுகின்ற ஒர தனி நபர அல்லத நிறுவனம குறிப்பிட்ட சதவிகிதத்த வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும சட்டத்தின கீழ இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டத.
வருமான வரி கணக்க சரிபார்த்தல மற்றும வசூலித்தல ஆகியவற்ற இந்திய அரசால நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி ுறையிடம (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளத. இத்துற Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ இயங்குகிறத.

வருமான வரி எங்க செலுத்த வேண்டும்? (Where should I pay Income Tax ?)
வருமான வரி-யை வருமான வரி துறையிடம செலுத்த வேண்டும். இத இன்கம டாக்ஸ பைலிங(Income Tax filing) என்பார்கள. ஒவ்வொரு வருடம ஜீல மாதம இறுதியில செலுத்த வேண்டும்.

வருமான வரி செலுத்த என்னென்ன தேவ ?
Class of Assessees Category Form
Individuals, HUF, Firms etc. (except companies and charitable assessees) All cases Form No. 2D or Saral form
One by Six scheme Form No. 2C
Business or Profession income Form No. 2
Non- business income Form No.3
Non business income and total income less than Rs 2 lakhs Form No. 2A
Charitable assesses All cases Form No 3A
Company except charitable assesses All cases Form No 1
Search cases All cases Form No 2B

வருமான வரி எந்த காலக்கட்டத்தில கணக்கிடப்படுகிறத ? (What is the period for which a person’s income is taken into account for purpose of Income tax?)
ஒவ்வொரு வருடமும ஏப்பரல 1 தேதி முதல் மார்ச் 31 வர பெற்ற வருமானத்த கொண்ட வரி கணக்கிடப்படுகிறத. இக்காலக்கட்டத்த வருமான வரி ஆண்ட (Financial year) என்று அழைக்கப்படுகிறது. இதன பிரிவியஸ் இயர் (Previous year) என்றும அழைக்கப்படுகிறது.

அசஸ்மெண்ட் இயர் என்றால என்ன? (What is an Assesment Year ?)
ஒவ்வொரு பிரிவியஸ் இயர் கழித்து வரும் பனிரெண்டு மாதங்கள் (எப்பரல் 1 முதல் மார்ச் 31) அசஸ்மெண்ட் இயர் (Assesment year) என்று அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட் இயரில் நாம் பிரிவியஸ் இயருக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். (In the Assessment year a person files his return for the income earned in the previous year. For example for FY:2006-07 the AY is 2007-08.)

வருமான வரித்துறை எதை வருமானம் என்கிறார்கள் ? (What does the Income Tax Department consider as income?)
இத ஐந்த வகைப்படும,
  • சம்பளத்தின மூலமாக பெற்ற வருமானம் (Income from Salary)
  • வீட்டின மூலமாக பெறப்படும வருமானம். (வாடகைக்க விடுவத, விற்பத, லீஸ்க்க விடுவத …..) (Income from House property)
  • வியாபாரத்தின மூலமாக பெறப்படும வருமானம். (Income from Business or Profession)
  • முதலீட்டின மூலமாக லாபமாக பெறப்படும வருமானம். (Income from capital gains)
  • மற்ற வழிகளில பெறப்படும வருமானம். (Income from other sources)

வருமான வரி சேமிப்ப வழிகள ?
  • Tax Rebates under Indian Income Tax Act
    Specified Investment Schemes u/s 80C
  • Life insurance premium payments
  • Contributions to Employees Provident Fund/GPF
  • Public Provident Fund (maximum Rs 70,000 in a year)
  • National Saving Certificates. [NSC]
  • Unit Linked Insurance Plan (ULIP)
  • Repayment of Housing Loan (Principal)
  • Equity Linked Savings Scheme (ELSS)
    Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction).
  • Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
  • Interest accrued in respect of NSC VIII issue.
பாண் அட்டை என்றால் என்ன ? (PAN – Permanent Account Number)
PAN Cardபாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம்.


பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)
  • வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.
  • டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 9

ஒரு அவுட்டோர் கேம் ஆடுவதில் எவ்வளவு சவால்கள் இருக்கிறதோ, அவை எல்லாமே கரன்சி மார்க்கெட்டிலும் இருக்கிறது. கரன்சி விளையாட்டில் உங்களுக்குப் பெரிய எதிராளி மார்க்கெட்தான்! எந்த ஒரு விளையாட்டிலும் அதிலிருக்கும் சவால்கள் அனைவருக்கும் சமமாக இருக்கும். அந்த சவாலை எதிர்கொண்டு தன்னுடைய தனித்திறமையால் வெற்றி பெறுபவர்கள் சேம்பியன்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், கரன்சி மார்க்கெட் எனும் கேமில் உள்ள சவால்கள் அந்த கேமை ஆடுபவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்காது! இந்த கேமில் மிகப்பெரிய சவால் எது தெரியுமா? ஒரு கரன்சியின் ஃபண்டமென்டல்கள் குறித்த மூலாதாரத் தகவல்கள்தான்.

ஸ்டாக் மார்க்கெட்டைப் பொறுத்தவரை ஒரு கம்பெனியைப் பற்றிய இன்ஃபர்மேஷன் அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டும். இது சட்டம். ஒரு கம்பெனியின் நடைமுறை குறித்த பெரும்பான்மையான தகவல்கள் (பி அண்ட் எல், பேலன்ஸ்ஷீட் மற்றும் பல பிரைஸ் சென்சிட்டிவ் இன்ஃபர்மேஷன்கள்) அனைத்தும் அத்தனை முதலீட்டாளர்களுக்கும் ஒரே நேரத்தில் சரியாக வந்து சேர்கிறதா என உறுதி செய்ய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் செபியும் இருக்கின்றன. சிலர் இந்த விதிகளை மீறி ரகசியத் தகவல்களை வைத்துக்கொண்டு லாபம் பார்க்கும்போது, அவர்கள் மீது 'இன்சைடர் டிரேடிங்' ரெகுலேஷனின் கீழ் நடவடிக்கைகள் பாயும்.

ஆனால், கரன்சி மார்க்கெட்டில் ஒரு கரன்சியின் விலையைப் பாதிக்கும் பல விஷயங்கள் வியாபாரம் செய்யும் அனைவருக்கும் ஒரேசமயத்தில் தெரிந்து விடுவதில்லை. டிரேட் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தியடித்து தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்கள். டிரேடர்களின் தகுதிக்கு (வங்கிகள், ரிசர்வ் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனிமனிதர்கள்) தகுந்தாற்போல் கிடைக்கும் தகவல்களும் மாறுபடுகின்றன. இன்ஃபர்மேஷன் ஒரே நேரத்தில் கிடைக்கவேண்டும் எனச் சட்டம் போடவும் முடியாது. ஏனென்றால் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு விவரங்கள் என ஒரு கட்டுக்குள் அடங்காத கண்டம் விட்டு கண்டம் தாவும் விஷயங்கள் இதில் உள்ளன!

உதாரணமாக, ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைமை குறித்த புள்ளி விவரங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால் மற்றவர்களுக்கு? இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதம் குறிப்பிட்ட தேதியன்று மானிட்டரி பாலிசியை வெளியிடும்போதுதான் தெரியவரும். ரிசர்வ் வங்கி விரும்பினால் முன்கூட்டியே அதாவது செப்டம்பரிலேயே கரன்சியைத் தேவையான திசையில் கொண்டு செல்ல இந்தத் தகவலை உபயோகித்திருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த விவரம் தெரியாமல் செப்டம்பரில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக கரன்சி மார்க்கெட்டில் நீச்சலடித்திருந்தீர்கள் என்றால் நஷ்டப்பட்டிருப்பீர்கள்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ட்டை மட்டும் பார்த்தே கரன்சி வியாபாரம் செய்து விடலாம் என்பது போன்ற ஒரு கருத்து தொடர்ந்து வெளியிடப்படுவதை இணையதளங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்திருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ட்டை வழிநடத்திச் செல்வது கரன்சிகளின் ஃபண்டமென்டல்கள்தான். உலகப் பொருளாதார நடவடிக்கைகளின் ஃபண்டமென்டல் விஷயங்களையும், டிமாண்ட், சப்ளைகள் அடங்கிய டெக்னிக்கல் சார்ட்களையும் சேர்த்துப் பிரதிபலிப்பதுதான் ஒரு கரன்சியின் மதிப்பு. எனவே ஃபண்டமென்டலை மட்டும் வைத்தோ அல்லது டெக்னிக்கல் களை மட்டும் வைத்தோ, கரன்சி டிரேடிங் செய்யமுடியாது. வெற்றி பெற இவை இரண்டையும் சம அளவில் கட்டாயமாக உபயோகித்தாகவேண்டும்.

ஒரு கரன்சி pair-ஆக டிரேடிங் செய்ய முடிவு செய்யும்போது அந்த முடிவு லாபமாக இருக்கும் வாய்ப்புகளை அதிகமாக்க எந்தெந்த டூல்கள் உதவும் என்பதைத் தேர்ந்தெடுப்பதுதான் கரன்சி டிரேடிங்கில் இருக்கும் பெரிய சவால்! இந்த சவாலை எதிர்கொள்ள எது கரன்சியின் மதிப்பை நடத்திச் செல்கிறது எனப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு கம்பெனியின் ஃபண்டமென்டல் என்பது பெரும்பாலும் நம்பர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. விற்பனை, லாபம், விற்பனை குறித்த ஃபோர்காஸ்ட் என எல்லா விஷயங்களும் நம்பர்களில் தெளிவாகச் சொல்லிவிடலாம். ஆனால், ஒரு கரன்சியின் ஃபண்டமென்டல் என்பது நம்பர்களால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒரு சில செய்திகள், ஒரு சிலரின் மனநிலைகள் கூட கரன்சியின் மதிப்பைப் பெரிதும் பாதிக்கும். அந்த விஷயங்கள் என்னென்ன எனப் பார்க்கலாம். உதாரணமாக, டாலரின் மதிப்பை வழிநடத்திச் செல்லும் சில விஷயங்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சீனாவின் சென்ட்ரல் வங்கிகளின் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் டாலர் போகும் திசையைப் பற்றிய சென்டிமென்ட்டை மாற்றக்கூடியது;

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் தலைநகரங்களில் இருந்து வரும் பயத்தை உண்டு பண்ணி டிரேடர்களை எமோஷனல் ஆக்கும் செய்திகள்;

அமெரிக்காவில் உள்ள ரீடெய்ல் ஸ்டோர்களின் மாதாந்திர சேல்ஸ் பற்றிய அறிக்கை டாலரின் இடைக்கால போக்கைப் பாதிக்கக் கூடியது;

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை;

அமெரிக்காவில் வீடுகளின் விற்பனை எண்ணிக்கை.

என அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோன்ற ஒவ்வொரு விதமான டேட்டாக்களும் டாலரின் மீதான சென்டிமென்ட்டை மாற்றுகிறது. இந்த மாதிரியான சென்டிமென்ட் மாறுதல்கள்தான் விலை ரியாக்ஷன்களையும், டாலரை வாங்க ரெடியாக இருப்பவர்கள் மற்றும் விற்க ரெடியாக இருப்பவர்களின் மனநிலையையும் மாற்றிவிடுகிறது.

சென்ற மூன்று அத்தியாயங்களில் நாம் தியரிடிக்கலாக கரன்சியின் விலை எவ்வாறு மாறுபடக்கூடும் எனப் பார்த்தோம். இப்போது மார்க்கெட்டில் கரன்சியின் விலையை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன எனப் பார்ப்போம்.


வட்டிவிகிதம்

ஒரு நாட்டில் உள்ள வட்டி விகிதம்தான் கரன்சியின் போக்கை நிர்ணயிக்கும் தலையாய விஷயமாகும். ரிசர்வ் வங்கிகள் நாட்டினுடைய பொருளாதாரத்தின் ஓட்டத்தை கட்டுக்குள் வைக்க வட்டிவிகிதத்தை ஒரு த்ராட்டில் போல உபயோகிக்கின்றன. எனவே, இந்த த்ராட்டிலில் வரும் மாற்றங்கள் கரன்சியின் மதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகிவிடுகிறது.

வட்டிவிகிதத்தில் நாடுகளுக்கிடையேயான வித்தியாசம்!

ஒரு நாட்டில் நிலவும் வட்டிவிகிதம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை இழுக்கும் காந்தசக்தியாக இருக்கிறது. உதாரணமாக, இந்திய ரிசர்வங்கி திடீரென வட்டிவிகிதத்தை 15 சதவிகிதமாக்குகிறது என வைத்துக்கொள்வோம்... உடனடியாக எந்தெந்த நாடுகளில் எல்லாம் வட்டிவிகிதம் 15 சதவிகிதத்துக்குக் கீழேயுள்ளதோ, அங்கிருந்து பணம் இந்தியாவை நோக்கி வர ஆரம்பித்துவிடும். அதன்மூலம் அதிக வட்டியில் முதலீடு செய்து லாபம் பார்க்க முயற்சிப்பார்கள்.

இப்படி வட்டி குறைந்த நாடுகளில் இருந்து வட்டி அதிகமான நாடுகளுக்கு பணம் செல்வதைத்தான் 'கேரி டிரேட்' என குறிப்பிடுவார்கள். வட்டிவிகிதம் குறைவாக உள்ள நாட்டிலிருந்து பணம் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும்போது அதிகமாக வாங்கப்படும் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுகிறது. அதிகமாக விற்கப்படும் அந்த நாட்டின் கரன்சி மதிப்பிழக்கிறது.

இப்படி நடக்கும்போது எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் வருகிறதோ, அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகப்படுத்தினால் உடனடியாக பணம் திரும்பிச்செல்ல முயற்சிக்கும். அப்படித் திரும்பிச் செல்லும்போது இந்திய ரூபாய் அதிகமாக விற்கப்பட்டு மதிப்பிழக்கும். இந்திய ரூபாயை விற்று வாங்கப்படும் மற்ற கரன்சிகளின் மதிப்பு கூடும்.

இன்ஃப்ளேஷன்

இன்ஃப்ளேஷனை வட்டிவிகிதத்தின் உடன்பிறப்பு என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் அனைத்து நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் தங்களுடைய இன்ஃப்ளேஷன் டார்கெட்டைச் சொல்ல ஆரம்பித்துவிட்டன. இன்ஃப்ளேஷன் அதிகமாகிவிடும் என்ற பயம் ஒரு நாட்டைப் பிடித்து ஆட்டும்போது, கரன்சி மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் அந்த நாட்டில் வட்டி அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது எனப் புரிந்துகொண்டு வியாபாரத்தில் குதிக்கின்றனர். இன்ஃப்ளேஷன் ஃபாரெக்ஸ் டிரேடர்களையும் ரிசர்வ் வங்கிகளையும் பயமுறுத்தும் ஒரு பூதம். இந்தப் பூதம் அடிக்கடி ஷாக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் கூட இன்ஃப்ளேஷனை துல்லியமாகக் கணக்கிடுவது மற்றும் ஃபோர்காஸ்ட் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இதையெல்லாம் படித்துவிட்டு ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்ய முதலில் பெரிய பொருளாதார நிபுணராக வேண்டியிருக்கும் என நினைத்து விடாதீர்கள். எல்லா நாட்டின் ரிசர்வ் வங்கிகளும் இன்ஃப்ளேஷன் குறித்த பல இண்டிகேட்டர்களை அவற்றின் வெப்சைட்டுகளில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவற்றை தொடர்ந்து டிராக் செய்து வந்தாலே போதுமானது.

அடுத்த இதழில்... குருடாயிலின் விலை, மெட்டல்களின் விலை, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு, கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் முதலியவை கரன்சியின் மதிப்பை 


எப்படிப் பாதிக்கும் எனப் பார்ப்போம்...






எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 8

கரன்சி வியாபாரத்துக்கும் ஷேர் வியாபாரத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஷேர் வியாபாரம் செய்ய எந்த ஷேரை வாங்குவது என்பதை மட்டும் முடிவு செய்தால் போதும். உதாரணத்துக்கு, 'இன்ஃபோசிஸ்' ஷேரை வாங்கவேண்டும் என்றால் ரூபாயைக் கொடுத்து வாங்கிவிடலாம். இன்ஃபோ சிஸ்-ன் ஃபண்டமென்டல் நிலையை மட்டும் பார்த்து வாங்கினால் போதும். கரன்சி யில் இதையும் தாண்டி இன்னொரு விஷயம் குறித்தும் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்.

கரன்சி Pair-களாக டிரேட் ஆகிறது. அதாவது, ஒரு கரன்சியை விற்றுத்தான் மற்றொரு கரன்சியை வாங்க வேண்டியிருக்கும். உதாரணமாக, ரூபாயின் மூலமாக டாலரை வாங்க நினைக்கிறோம் என்றால், டாலர் மதிப்பிடப்படும் கரன்சியாகவும் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட உபயோகிக் கப்படும் கரன்சியாகவும் இருக்கும். எனவே ஒரு கரன்சியை வாங்கி லாபம் பார்க்க நினைக்கும் வேளையில், வாங்கும் கரன்சியின் ஃபண்டமென்டல் நிலைமையும், எந்த கரன்சியைக் கொடுத்து வாங்கப் போகிறோமோ அதன் ஃபண்டமென்டல் நிலைமையும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ரூபாயைக் கொடுத்து டாலரை வாங்குவதாக இருந்தால் டாலர் மற்றும் ரூபாயின் ஃபண்டமெண்டல் நிலைமை நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால், ரூபாயின் ஃபண்ட மென்டல் டாலரை விட ஸ்ட்ராங் காக இருந்தால் டாலரை வாங்கு வதில் பிரயோஜனம் இல்லை. இந்த ஃபண்டமென்டல் நிலைமையைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு விஷயம்தான் 'பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்' என்கிற 'பி.ஓ.பி.'

இந்த 'பி.ஓ.பி.' என்ற வார்த்தை நியூஸ் பேப்பர்கள், ஆர்.பி.ஐ-யின் அறிக்கைகள், நிதியமைச்சகத்தின் அறிக்கைகள், பொருளா தாரம் குறித்த விவாதங்கள் ஆகியவற்றில் அடிக்கடி இடம் பெறுவதைப் பார்த்திருக்கலாம். மிகச் சாதாரணமான ஒரு வார்த்தைதான் இது என்றாலும் கூட, அதுகுறித்து நிறைய பேர் தெளிவில்லாமல்தான் இருக்கிறார் கள். அதற்குக் காரணம் இந்த வார்த் தையை பலர் தவறான அர்த்தத்தில் உபயோகிப்பதுதான்.

கரன்சி வியாபாரம் செய்ய இந்த பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட் எப்படித் தயாரிக்கப் படுகிறது எனத் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அது அரசாங்கத்தின் வேலை. ஆனால், பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டின் மூன்று முக்கிய உபயோகத்தினைப் பற்றி அவசியம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அதற்கு முதல்படியாக அந்த ஸ்டேட்மென்ட்டில் என்னென்ன இருக்கும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.

பி.ஓ.பி. என்பது ஒரு புள்ளிவிவர அறிக்கை. உதாரணமாக, இந்தியா மற்ற உலக நாடுகளுடன் ஒரு வருடத்தில் செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல்-வாங்கல்களை ஒரு டபுள் என்ட்ரி சிஸ்டத்தில் என்டர் செய்து ஸ்டேட்மென்ட் போட்டால் அது கீழ்க்கண்ட விஷயங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

1) இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி (பொருள் மற்றும் சர்வீஸ்).

2) இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் நடுவே வங்கிக் கணக்குகளில், ஷேர்களில், பாண்டுகளில், ரியல் எஸ்டேட்டில் செய்யப்பட்ட முதலீடுகள்.

இவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம், வெளிநாடு களுக்கு இந்தியாவில் இருந்து சென்ற பணம், மற்றும் நிகர நிலைமை... அதாவது மொத்தத்தில் ஒரு வருடத்தில் அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு உள்ளே வந்ததா? இந்தியாவின் கையிலிருந்த செலாவணி கரைந்ததா? அல்லது கையில் செலா வணி இல்லாததால் அந்நியச் செலாவணி கடன் வாங்கி காலந்தள்ள வேண்டியிருந்ததா என்பது தெரிந்துவிடும்.

வெளியே சென்ற கரன்சி அதிகம் என்றால்...

உள்ளே வந்த அந்நிய கரன்சியை விட வெளியே சென்றது அதிகமென்றால், ரூபாய் மதிப்பிழந்திருக் கும். எப்படி? அந்நிய கரன்சி அதிகமாக வெளியே செல்லும்போது ரூபாய் விற்கப்பட்டு அந்நிய கரன்சி வாங்கப்பட்டிருக்கும். அப்போது அதிகமாக வாங்கப்படும் அந்நிய கரன்சியின் மதிப்பு கூடியிருக்கும். அதிகமாக விற்கப்படும் ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும்.

உள்ளே வந்த கரன்சி அதிகம் என்றால்...

அந்நிய கரன்சி வெளியே சென்றதை விட, உள்ளே வந்தது அதிகமென்றால் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும். எப்படி? அந்நிய கரன்சி அதிகமாக உள்ளே வரும்போது அந்த கரன்சி விற்கப்பட்டு ரூபாய் வாங்கப்பட்டிருக்கும். அப்போது அதிகமாக வாங்கப்படும் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும்.

பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டில் எவையெல்லாம் இருக்கும்?

ஒரு நாட்டின் பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டில் ஒரு வருடத்தில் அது மற்ற நாடுகளுடன் செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மூன்று விதமாக குரூப் செய்யப்பட்டிருக்கும்.

a. கரன்ட் அக்கவுன்ட்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சர்வீஸ்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, வட்டி, டிவிடெண்ட், தானம் (Aid) கொடுத்தது/பெற்றது.

b. கேப்பிட்டல் அக்கவுன்ட்: டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் (எஃப்.டி.ஐ.), போர்ட் ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் (எஃப்.ஐ.ஐ.), இரண்டு நாடுகளில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக வாங்க மற்றும் விற்கப்பட்ட உற்பத்தி செய்யப்படாத விஷயங்கள் (பொதுவாக ஃபை னான்ஸியல் அசெட்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட்), வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட/டெபாசிட்டாக வைக்கப்பட்ட தொகைகள், ஷேர்கள், பாண்டுகள், ரியல் எஸ்டேட்.

c. அஃபிஷியல் ரிசர்வ் அக்கவுன்ட்: வாங்கிய அல்லது விற்ற சில ரிசர்வ் அஸெட்கள். உதாரணமாக டாலர், ஃபாரின் எக்ஸ்சேஞ்ச், தங்கம், ஸ்பெஷல் டிராயிங் உரிமைகள் போன்றவை.

அஃபிஷியல் ரிசர்வ் என்பது ஒரு நாட்டின் சென்ட்ரல் பேங்க் (ஆர்.பி.ஐ.) தன் கையில் வைத் திருக்கும் டாலர், தங்கம் மற்றும் ஸ்பெஷல் டிராயிங் உரிமைகள் போன்றவைகள்.

ஒரு நாட்டின் (கரன்ட் அக்கவுன்ட்) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலைமைதான் கரன்சியின் மதிப்பை உடனடியாகப் பாதிக்கும் விஷயம். ஏற்றுமதியை விட மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாட்டின் கரன்சி மதிப்பிழக்கும். ஏற்றுமதி/இறக்குமதி கரன்ட் அக்கவுன்ட்டின் கீழ் வருகிறது. எனவே, கரன்ட் அக்கவுன்ட்டில் துண்டு (டெஃபிசிட்) பெரிதாக விழுந்தால் கரன்சியின் மதிப்பு குறையும்.

அதாவது, இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் போது கம்பெனிகள் ரூபாயை விற்று டாலரை வாங்குவார்கள். ரூபாய் மதிப்பிழக்கும். அப்படி மதிப்பிழக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் சரக்கின் விலையும் கூடும். எனவே ரூபாயின் மதிப்பை ஸ்டெபிலைஸ் செய்ய ஆர்.பி.ஐ. கையில் இருக்கும் (அஃபிஷியல் ரிசர்விலிருந்து) டாலரை விற்கும். ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையால் அதன் அஃபிஷியல் ரிசர்வ் குறையும். அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு கூடும். தொடர்ந்து இறக்குமதி அதிகமாகவேயிருந்து, ஆர்.பி.ஐ. கையில் இருக்கும் ரிசர்வ் எல்லாம் காலியாகிவிட்டால், ஆர்.பி.ஐ. வெளிநாட்டிலிருந்து டாலரைக் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஏனெனில், கையில் டாலரில்லாமல் ஆர்.பி.ஐ. இருந்தால், டாலர் மதிப்பை நாட்டு நலனுக்கேற்ப ஆர்.பி.ஐ-யால் மேனேஜ் செய்யமுடியாது.

அதேபோல் பி.ஓ.பி. மிகவும் பாசிட்டிவ் ஆகி, ரூபாயின் மதிப்பு கூடிக்கொண்டே போனால், ஏற்றுமதியாளர்கள் தொழில் நடத்த முடியவில்லை எனக்கூக்குரலிடுவார்கள்... (டாலர் மதிப்பு 2007-ல் ரூபாய் 38 ஆனபோது அவர்கள் தவித்தது போல). அப்போது ஆர்.பி.ஐ. மார்க்கெட்டில் சென்று டாலர்களை வாங்கி அதன் மதிப்பைக் கூட்டி ரூபாயின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் இறங்கும். அதுபோன்ற சூழ்நிலையில் அஃபிஷியல் ரிசர்வின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டின் மூன்று உபயோகங்கள்:

1. ஒருநாட்டின் கரன்சிக்கு ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமிருக்குமா, அல்லது சப்ளை அதிகமாக இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, இந்தியா ஒரு வருடத்தில் 1,000 டாலருக்கு இறக்குமதியும் 100 டாலருக்கு ஏற்றுமதியும் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... கரன்சி சந்தையில் ரூபாயின் நிலை என்னவாகும்? இறக்குமதி மதிப்பில் ($1,000) இருந்து ஏற்றுமதி மதிப்பினைக் ($100) கழித்துவிட்டால் மீதி 900 டாலர்களை இந்தியா அமெரிக்காவுக்குக் கொடுக்கவேண்டும். இந்த 900 டாலர்களை கரன்சி மார்க்கெட்டில் வாங்க இந்திய இறக்குமதியாளர்கள் ரூபாயை விற்று அந்த 900 டாலர்களை வாங்கவேண்டும். அதிகமாக விற்கப்படும் ரூபாய் மதிப்பிழக்கும். வாங்கப்படும் டாலர் மதிப்பு கூடும். உதாரணமாக, 1 டாலரின் மதிப்பு 38 ரூபாயிலிருந்து 45-ரூபாய்க்குப் போனால் டாலரின் மதிப்பு கூடுகிறது; ரூபாயின் மதிப்பு குறைகிறது.

2. ஒரு நாட்டுடன் மற்ற நாடுகள் நல்ல தரமான மற்றும் தடையற்ற பிஸினஸைத் தொடர வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த நாட்டின் பி.ஓ.பி. பொசிஷன் மிக மோசமாகிவிடும். எனவே அந்த நாட்டின் அரசு இறக்குமதிக்கு டிரேட் பேரியர்ஸ்/ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் (கஸ்டம்ஸ் டூட்டி அதிகரித்தல்/ அட்வலோரம் டூட்டி/டம்ப்பிங் டூட்டி போன்றவை) கொண்டுவரலாம். இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்போது அந்த நாடு எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடும் தங்களது இறக்குமதிக்கு இதேபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரக்கூடும். அப்படிச் செய்தால் நடந்துகொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச ஏற்றுமதியும் குறைந்துவிடலாம். அதானால் கரன்சி மேலும் மதிப்பிழக்கலாம்.

3. ஒரு நாடு எந்த அளவுக்கு தொழில் ரீதியான திறமை மற்றும் வல்லமை படைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மிகவும் மோசமான பி.ஓ.பி. பொசிஷனைவைத்தே அந்த நாட்டின் டொமஸ்ட்டிக் இண்டஸ்ட்ரீஸ் உலக மார்க்கெட்டில் போட்டி போடத் தகுதியற்றவையாக இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிடலாம். அதைக்கொண்டு அந்த நாட்டு கரன்சியின் மதிப்பு பெரிய அளவில் கூடாது என்பதை அறியலாம்.

அடுத்த இதழில் கரன்சி டிரேடிங்குக்கும் ஸ்டாக் மார்க்கெட்டுக்கும் உள்ள மற்றுமொரு பெரிய வித்தியாசம் என்ன எனப் பார்ப்போம்.

கரன்சியிலும் கலக்கலாம் - 7

கரன்சி விவகாரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்குக் கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டியதிருக்கும். காரணம் கரன்சி விஷயத்தில் பல காரணிகள் இருப்பதுதான். இந்த இதழில் ஒரு பொருள் ஒரு நாட்டிலும் இன்னொரு நாட்டிலும் விற்கப்படும் விலையைக்கொண்டு கரன்சியின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவது என்பது குறித்துப் பார்க்கலாம்...

ராம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே பைலட் ஆக வேலை பார்க்கிறான். ஜப்பான், சிங்கப்பூர், லண்டன் எனப் பறந்துகொண் டேயிருப்பான். அமெரிக்காவில் பிறந்ததனாலோ என்னவோ அவன் மெக்டொனால்டு பர்கருக்கு அடிமை. அதிலும் பிக்மேக் எனும் வெரைட்டி என்றால் கொள்ளைப் பிரியம். ஒருமுறை அவன் ஹாங்காங் போக நேர்ந்தது. அங்கே இறங்கி ஓட்டலில் செக்இன் செய்துவிட்டு ஒரு வாக் போனான். வழியில் தென்பட்ட ஒரு மெக் டொனால்டு அவுட் லெட்டுக்குள் நுழைந்து, தனது ஃபேவரிட் அயிட்டமான பிக்மேக் பர்கருக்கு ஆர்டர் கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்தால் ஒரு பிக்மேக் 13.30 ஹாங்காங் டாலர் என்றிருந்தது. ராம் ஹாங்காங் ஏர்போர்ட்டில் தன்னிடமிருந்த அமெரிக்க டாலரை மாற்றியபோது ஒரு டாலருக்கு 7.57 ஹாங்காங் டாலர்கள் கொடுத்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிக்மேக் சாப்பிட்டபோது அங்கே விலை 3.54 யு.எஸ். டாலர். அந்தக் கணக்கில் பார்த்தால் ஹாங் காங்கில் பர்கரின் விலை 27.44 ஹாங்காங் டாலராக இருக்கவேண்டும். ஆனால், 13.30 டாலர் என்றுதான் சொல்கிறார்கள். ஒருவேளை மெக்டொனால்டு நிறுவனம் அமெரிக்காவில் அதிக விலைக்கும் ஹாங்காங்கில் குறைவான விலைக்கும் வேண்டுமென்றே விற்கிறதா? சரி, டேஸ்ட்டில் ஏதாவது சூட்சுமம் வைத்திருப்பார்களோ என்று பார்த்தால் அதே டேஸ்ட்தான்! அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.

இந்த விலைப் பிரச்னைக்கு மெக்டொனால்டு காரணமா, கரன்சி எக்ஸ்சேஞ்ச் விலை காரணமா? இந்தக் குழப்பம் உங்களுக்கும் வந்திருக்கும் இல்லையா? இது எப்படி எனப் பார்ப்போம்!

ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது? உதாரணத்துக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொருளை அல்லது சர்வீஸை எந்த அளவுக்கு வாங்க முடிகிறது என்பதைப் பொறுத்துதான் ரூபாயின் மதிப்பு இருக்கும். இதைத்தான் 'பர்ச்சேஸிங் பவர்' என்பார்கள்.

இதே வழியில் ஒரு கரன்சியின் மதிப்பு மற்றொரு கரன்சிக்கு எதிராக எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்...

ராமின் கதையையே எடுத்துக்கொள்வோம்... ஹாங்காங்கில் 13.30 ஹாங்காங் டாலருக்கு பர்கர் கிடைத்து, அமெரிக்காவில் அதே பர்கர் 3.54 யு.எஸ். டாலருக்குக் கிடைக்கிறது என்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஹாங்காங் டாலரின் மதிப்பு (13.30/3.54) 3.76- ஆக இருக்கவேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் ராம் ஹாங்காங்குக்கு டூட்டியில்வந்து பர்கர் சாப்பிட்டு லாபமடையமுடியாது. ஆனால், ராம் ஹாங்காங்கில் இறங்கும்போது டாலருக்கெதிரான ஹாங்காங் டாலரின் மதிப்பு 3.76-க்குப் பதிலாக 7.57 ஆக இருந்தது. அதாவது மார்க்கெட்டில் நடப்பு எக்ஸ்சேஞ்ச் ரேட், பர்ச்சேஸிங் பவரின்படி வரும் மதிப்பை விட கிட்டத்தட்ட 50% அதிகமாக உள்ளது. இன்னும் டெக்னிக்கலாகச் சொன்னால் அமெரிக்கன் டாலருக்கெதிராக ஹாங்காங் டாலர் சுமார் 50% மார்க்கெட்டில் பர்ச்சேஸிங் பவர் மதிப்பை விட குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஹாங்காங்கில் இருந்து ராம் மாதிரி ஒரு பர்கர் பைத்தியம் அமெரிக்கா சென்று பர்கர் வாங்கிச் சாப்பிட நினைத்தால் என்னவாகும்? அவர் 3.76 ஹாங்காங் டாலரை எடுத்துச்சென்றால் அமெரிக்காவில் பர்கர் சாப்பிடமுடியாது. அவர் ஊரில் கிடைக்கும் பர்கர் அமெரிக்காவில் இரண்டு மடங்கு விலையாகிறது.

'லா ஆஃப் ஒன் பிரைஸ்' என்ற ஒரு தியரி என்ன சொல்கிறது தெரியுமா? 'ஒரே மாதிரியான தரம் மற்றும் குணம் உள்ள பொருட்கள் அனைத்தும் உலகெங்கிலும் ஒரே விலையில்தான் விற்கப்படும்!' என்கிறது அந்த தியரி. ராம் அமெரிக்காவிலும் ஹாங்காங்கிலும் விரும்பிச் சாப்பிட்ட பர்கரில் ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே 'லா ஆஃப் ஒன் பிரைஸ்' படி ஒரே விலைதான் இருந்திருக்கவேண்டும்.

'லா ஆஃப் ஒன் பிரைஸ்' தியரி ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீது அப்ளை செய்யப்படும்போது (கமாடிட்டி பேஸ்கட்) 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி தியரி' நமக்குக் கிடைக்கிறது. 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி தியரி' என்ன சொல்கிறது என்றால் இதுபோன்ற விலை வித்தியாசம் வெளிப்படையாக இருக்கும்போது (அதாவது 3.76-க்குப் பதில் 7.57-ஆக இருக்கும்போது) நாளடைவில் அமெரிக்கன் டாலருக்கெதிராக ஹாங்காங் டாலரின் மதிப்பு 7.57-லிருந்து 3.76-க்கு மாறிவிடும் என்கிறது.

மேலே குறிப்பிட்டதைப் போன்ற டாலருக் கெதிரான 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி'-யின்படி வரும் மதிப்பை விட குறைவான மதிப்பை ஒரு கரன்சி அடையும்போது என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.

ஹாங்காங்கிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மிக சீப்பாகிவிடும். உதார ணமாக, ஒரு புத்திசாலி தொழிலதிபர் பர்கரை ஹாங்காங்கில் இருந்து வாங்கி அமெரிக்காவில் விற்றால் அவருக்கு சூப்பர் லாபம் கிடைக்கும். இப்படி அவர் இறக்குமதி செய்யும் பிராசஸில் என்ன நடக்கும்?

அவர் அமெரிக்க டாலரை விற்று ஹாங்காங் டாலர் வாங்குவார்.

அதிகமாக விற்கப்படும் அமெரிக்க டாலர் மதிப்பிழக்கும்.

அதிகமாக வாங்கப்படும் ஹாங்காங் டாலரின் மதிப்பு கூடும்.

இப்படி ஹாங்காங் டாலரின் அமெரிக்க டாலருக் கெதிரான மதிப்பு கூடி, ஒரு டாலரின் மதிப்பு 7.57 ஹாங்காங் டாலரிலிருந்து 3.76-க்கு வந்து நின்றுவிடும் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

இதுபோன்ற விலை மாறுதல்கள் சில நேரங்களில் நிகழாது. எப்போதெல்லாம் என்கிறீர்களா?

1. ஹாங்காங் கவர்ன்மென்ட் கரன்சி மார்க்கெட்டில் புகுந்து வியாபாரம் செய்யும்போது...

2. வேண்டுமென்றே ஹாங்காங் டாலரை விற்று அதன் மதிப்பைக் குறைக்கும்போது...

3. ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் அதிகமாக ஸ்பெகுலேஷன் நடக்கும் வேளையில்...

4. இந்த 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி' மதிப்புக்கும் (3.76), ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் டாலருக்கெதிரான ஹாங்காங் டாலரின் விலைக்கும் (7.57) உள்ள வேற்றுமையும் மீறி, லாங் டேர்ம் முதலீடுகள் அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கை நோக்கி வேக மாகச் சென்றுகொண்டிருக்கும்போது...

5. அமெரிக்கா மற்றும் ஹாங்காங்கின் பொருளாதாரங்கள் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்திக்கும்போது...

'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி' ரியல் ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் மிகவும் பெரிய அளவில் பிராக் டிகலாக உதவாத ஒன்றாக இருப்பினும், இந்த தியரி உலக நாடுகள் குறித்து பொருளாதார ரீதியாக ஆய்வு செய்வதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. முதலாவதாக, இந்த தியரியை வைத்து ஒரு நாட்டின் கரன்சி மற்ற கரன்சிகளை விட ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் அதிக மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறதா என்பதை அறியலாம். இரண்டாவதாக, உலக நாடுகளின் மத்தியில் பொருளாதார ரீதியான ஓர் ஒப்பீடைச் செய்ய இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது.

உதாரணத்துக்கு உலகில் உள்ள 15 நாடுகளின் பொருளாதார அளவை (2001-ம் ஆண்டு ஜி.என்.பி.மதிப்பீடு) பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி மூலமும், மார்க்கெட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் மூலமும் ஒப்பிட்டு (மேலே உள்ள இந்திய பொருளாதாரம் 2001 நிலவரம்) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி ரேட்டில் வேல்யூ செய்தால் இந்தியாவின் நிலைமை உலகின் பொருளாதார வரிசையில் 12-லிருந்து 4-க்கு மாறிவிடுகிறது!

கரன்சியின் விலையில் சம்பந்தப்பட்ட வேறு சில விஷயங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்...







எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 6

கடந்த இதழில் கரன்சியின் மதிப்பு எப்படி மாறுகிறது என்பதைப் பார்த்தோம். இனி ஒரு நாட்டின் வட்டி விகிதம் அந்நாட்டு கரன்சியின் மதிப்பை எப்படிப் பாதிக்கும் என்று பார்க்கலாம்...

சரவணனுக்கு அவனுடைய பணம் எப்போதும் குட்டி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதைத் தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு எப்படியாவது லாபம் பார்த்துவிடுவான். அமெரிக்காவில் கூடுதல் சம்பளத்தில் வேலை கிடைக்கவும் அங்கே போனவன் ஆரம்பத்தில் கொஞ்சம் தவித்துதான் போனான். அதன்பிறகு அங்கேயும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தைக் குட்டிபோட வைக்க ஒரு வழி இருப்பதைக் கண்டுகொண்டான். அந்த வழி கரன்சி ஆர்பிட்ரேஜ் செய்வது. வழிகாட்டியது அங்கே அவனுடன் வேலைபார்க்கும் ஒருவர்தான்.

அவர் வேலை இருந்தாலும் இல்லா விட்டாலும் தன்னுடைய மானிட்டரில் பிஸினஸ் வெப்சைட்டுகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பார். அதில் டாலர், பவுண்ட் ஆகியவற்றின் ஸ்பாட் மற்றும் ஃபார்வர்டு விலையும் பல்வேறு நாடுகளின் வட்டி விகிதங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அவரிடம்தான் ஸ்பாட் என்றால் என்ன, ஃபார்வர்டு என்றால் என்ன என்று கற்றுக்கொண்டான். ''ஸ்பாட் என்றால் இன்றைக்கு ஒரு பவுண்ட் வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு டாலர் கொடுக்கவேண்டும் என்பது. ஃபார்வர்டு என்பது ஒரு வருடம் கழித்து ஒரு பவுண்ட் வேண்டும் என்றால் அதற்காகக் கொடுக்க வேண்டிய டாலர் எவ்வளவோ அதற்கான ஒப்பந் தத்தினை இன்றே செய்துகொள்வது'' என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

அப்படித்தான் ஒரு நாள் பவுண்ட்-ன் ஸ்பாட் விலை 1.50 டாலராகவும், ஒரு வருட ஃபார்வர்டு விலை 1.48 டாலராகவும் இருந்ததையும் கவனித்துவிட்டு மண்டை குழம்பிப் போனான். ''என்ன இது... இன்னைக்கு ஒரு பவுண்ட் வேண்டுமென்றால் 1.50 டாலர் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு வருஷம் கழித்து வேண்டுமென்றால் 1.48 டாலர் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது'' என்று நண்பரது தலையைப் போட்டு உருட்டினான். அவரோ கூலாக அமெரிக்காவில் பேங்க் வட்டி 5% என்பதையும் அதுவே லண்டனில் வட்டி 8 சதவிகிதமாக இருப்பதையும் காட்டினார். சரவணனும் புரிந்துகொண்டான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கரன்சி ஆர்பிட்ரேஜைக் கற்றுக் கொண்டவன், அடுத்தகட்டமாக தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தான்.

அவனது திட்டம் இதுதான்... தனது கணக்கில் வங்கியில் இருக்கும் ஒரு லட்சம் டாலருக்கு வட்டி 5 சதவிகிதம்தான் கிடைக் கும். அதாவது ஒரு வருடத்தில் 5,000 டாலர் தான் கிடைக்கும். அதற்குப் பதிலாக அந்த ஒரு லட்சம் டாலரை இன்றைய ஸ்பாட் விலையில் (ஒரு பவுண்டுக்கு 1.50 டாலர் என்ற நிலையில்) பவுண்டாக மாற்றிவிடுவது. அப்படி மாற்றினால் 66,666.67 பவுண்ட் கிடைக்கும். அதை லண்டன் பேங்க்கில் டெபாசிட் செய்துவிடுவது. அங்கே 8 சதவிகித வட்டி கிடைக்கும் என்பதால், ஒரு வருடம் கழித்து 72,000 பவுண்ட் ஆகிவிடும். அந்தத் தொகையை ஃபார்வர்டு கான்ட்ராக்ட் மூலமாக டாலருக்கு மாற்றிவிடுவது. தற்போதைய நிலையில் 1.48 டாலர் என்ற ரேட்டுக்கு மாற்றினால் 1,06,560 டாலர் ஆகிவிடும். அதாவது அமெரிக்க வங்கியில் போட்டு வைத்திருந்தால் 1,05,000 டாலர்தான் கிடைக்கும். இந்த வழியில் 1,560 டாலர் அதிகமாகக் கிடைக்கும். இதுதான் சரவணனின் கணக்கு.

அதற்கு பின் அவ்வப்போது இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைத் தவறாமல் பயன்படுத்தி லாபம் பார்த்துவிடுவான். சில சமயங்களில் அவன் பணத்தைப் போடுவதற்குள் ஃபார்வர்டு ரேட் மாறிவிட, ஏமாற்றத் துடன் திரும்ப வேண்டியதாகி விடும். ஆனாலும் எப்படியாவது வருடத்துக்கு பத் தாயிரம் இருபதாயிரம் டாலராவது லாபம் பார்த்துவிடுவான்.

இதைப் படித்ததும் நாமே இப்படிச் செய்து லாபம் பார்க்கலாமே என்று தோன்றுகிறதா? ஆனால், அதுஅவ்வளவு சுலபம் இல்லை. கரன்சி மார்க்கெட்டில் நடக்கும் இந்த ஜாலத்தை 'இன்ட்ரஸ்ட் ரேட் பேரிட்டி' எனச் சொல்வார்கள். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மார்க்கெட்டில் இதுபோன்ற வாய்ப்புகள் சில நிமிடங்கள் இருந்தாலே அது பெரிய விஷயம்!

சரி அது இருக்கட்டும், சரவணனைப் போன்ற ஏராளமானவர்கள் இப்படிச் செய்யும்போது அதனால் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் என்ன நடக்கும் எனப் பார்ப் போம்... நிறைய பேர் டாலரில் கடன் வாங்கி, பவுண்ட் ஆக மாற்ற முயற்சி செய்வார்கள். எனவே லோனுக்கான டிமாண்ட் அதிகமாவதால் டாலரின் (அமெரிக்காவில்) வட்டி விகிதம் ஏறும்.

அப்படி கடன் வாங்குபவர்கள் ஸ்பாட் மார்க் கெட்டில் டாலர்களை விற்று பவுண்டுகள் வாங்கி அதை பேங்க்கில் டெபாசிட் செய்வார்கள். பவுண்டை அனைவரும் துரத்தி துரத்தி வாங்குவதால் பவுண்டின் ஸ்பாட் விலை அதிகரிக்கும். அவ்வாறு வாங்கிய பவுண்டை அத்தனை பேரும் டெபாசிட் போட முயற்சிப்பார்கள். எனவே பவுண்டின் டெபாசிட் சப்ளை அதிகமாகி, அதன் (பிரிட்டனில்) வட்டி விகிதம் இறங்கிவிடும்.

ஒரு வருடம் கழித்து டெபாசிட் முதிர்வுத் தொகையை டாலராக மாற்ற ஃபார்வர்டு கான்ட் ராக்ட் வாங்குவார்கள். அதாவது ஒரு வருடம் கழித்து பவுண்டை விற்பதற்கான ஒப்பந்தம்போட அனைவரும் க்யூவில் நிற்பார்கள். அப்படி விற்கப் படுவதால் ஃபார்வர்டு மார்க்கெட்டில் பவுண்டின் மதிப்பு குறையும்.

இந்த ஹைஸ்பீட் நிகழ்வுகள் விலை வித்தியாசத்தை உடனடியாக நேர் செய்து, ஒரு பாயின்ட்டுக்குப்பின் இதுபோன்ற ஃபண்ட்ஸ் மூவ்மென்ட் செய்து யாரும் லாபம் சம்பாதிக்க முடியாமல் போகும். ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டில் உள்ள வட்டி விகிதம் மாற்றப்படும்போது இது போன்ற வாய்ப்புகள் வந்து உடனடியாக கரன்சிகள் விற்று வாங்கப்பட்டு விலைகள் சீரடைந்துவிடும். எனவே, ஒரு நாட்டின் வட்டி விகிதம் மாறும்போது மாறுதலுக்கு ஏற்றாற் போல் கரன்சியின் மதிப்பு ஏறவோ, இறங்கவோ செய்யும். இப்படியான மாற்றங்கள் நேரடியாக நடந்தாலும் இந்தியா போன்ற சில முழு கன்வர்ட் டபிலிட்டி இல்லாத நாடுகளில் அந்நியர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து டெபாசிட் செய்து பின்னர் எடுத்துச் செல்லமுடியாது. இதுபோன்ற கரன்சி கட்டுப்பாடுகள் இருப்பதால் இதுபோன்ற நாடுகளில் முழுஅளவில் இந்த பேரிட்டியை எஃபெக்டிவாக கணக்கிடமுடியாது.

ஒரு பொருள் ஒரு நாட்டிலும் மற்றொரு நாட்டிலும் விற்கப்படும் விலையைக்கொண்டு, கரன்சியின் மதிப்பை எஸ்டிமேட் செய்வது எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்...