POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 5

இந்த இதழில் கரன்சியின் மதிப்பு எப்படி மாறுகிறது என்பது குறித்து பார்க்கலாம்... எக்ஸ்சேஞ்ச் ரேட் என்பது ஒரு கரன்சியை மற்றொரு கரன்சியினால் மதிப்பீடு செய்வது என்று கொள்ளலாம்.

நாணயம் விகடன் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் ஷேர் மார்க்கெட்டுக்கு மிகவும் பரிச் சயமானவர்கள். எனவே, ஷேர்களை வைத்தே எளிதாக இதனைப் புரிந்துகொள்ளலாம்...

பொதுவாக ஷேர்களின் மதிப்புக்கும் கரன்சி களின் மதிப்புக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்.எஸ்.இ.) தான் உலகம் என வைத்துக்கொள்வோம். என்.எஸ்.இ-ல் லிஸ்ட் ஆகியுள்ள கம்பெனிகள் (1,302) அத்தனையும் தனித்தனி நாடுகள் என கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது அந்தந்த கம் பெனிகளின் ஷேர்கள்தான் அந்தந்த நாட்டின் கரன்சி எனவும் வைத்துக்கொள்வோம். ஸ்டாக் மார்க்கெட்டில் கம்பெனி நல்ல லாபம் சம்பாதித்த தென்றால் ஷேரின் மதிப்பு அதிகமாகும். ஸ்டாக் மார்க்கெட்டில் ஷேரின் மதிப்பு ரூபாயில் கணக் கிடப்படுகிறது. கம்பெனிகளை நாடாக மாற்றி ஷேர்களை கரன்சியாக மாற்றிவிட்டால் ஒரு கம்பெனி ஷேரின் (கரன்சி) மதிப்பு மற்றொரு கம்பெனியின் ஷேரைக் (கரன்சி) கொண்டுதானே மதிப்பிடவேண்டும்? இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை வைத்துப் பார்க்கலாம்.

என்.எஸ்.இ-ல் எட்சர்வின் கம்பெனியின் இன்றைய சுமாரான மதிப்பு (ஷேர் லாபத்தின் அடிப்படையில்) 100 ரூபாயாகவும், இன்ஃபோசிஸ் கம்பெனியின் சுமாரான மதிப்பு (ஷேர் லாபத்தின் அடிப்படையில்) 2,000 ரூபாயாகவும் இருக்கிறது.

எட்சர்வையும், இன்ஃபோசிஸ்ஸையும் நாம் நாடாக்கிவிடுவோம். இப்போது எட்சர்வ் நாட்டி லிருக்கும் ஒருவர் இன்ஃபோசிஸ் நாட்டுடன் வியாபாரம் செய்ய நினைக்கிறார். அதற்கு அவருக்கு இன்ஃபோசிஸ் கரன்சி தேவைப்படுகிறது. ஒரு இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்க எத்தனை எட்சர்வ் கரன்சி அவர் கொடுக்க வேண்டியிருக்கும்? '20 எட்சர்வ் கரன்சியைக் கொடுத்தால் 1 இன்ஃபோசிஸ் கரன்சி கிடைக்கும்' என எல்.கே.ஜி. குழந்தைகூடச் சொல்லிவிடும். இதுவே மூன்று மாதங்களுக்கு முன்பு எட்சர்வ் ஷேரின் மதிப்பு 25 ரூபாயாகவும் இன்ஃபோசிஸ் 1,700 ரூபாயாகவும் இருந்தது. அப்போது எட்சர்வ் நாட்டிலிருப்பவர் 1 இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்கவேண்டுமெனில் 58.3 எட்சர்வ் கரன்சியைக் கொடுத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களில் திடீரென எட்சர்வ் நாட்டில் ஏதோ சுபிட்சமான விஷயம் நடந்திருக்க வேண்டும். அதனால்தானே எட்சர்வ் கரன்சியின் மதிப்பு அதிகமாகி 58.3-க்கு பதிலாக 20 எட்சர்வ் கரன்சியைக் கொடுத்து ஒரு இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்க முடிகிறது.

எட்சர்வ் ஒரு கம்பெனியாயிருக்கும்போது சுபிட்சம் எதனால் வருகிறது? அதிக வியாபாரம் மற்றும் நல்ல லாபம்! எட்சர்வ் நாடாகும்போது அதன் சுபிட்சம் எதனால் வருகிறது? அது செய்யும் வியாபாரத்தால்! எட்சர்வ் நாட்டின் வியாபார மென்பது அது இன்ஃபோசிஸ் போன்ற மற்ற நாடுகளுடன் செய்யும் வியாபாரத்தினைக் குறிக்கும். எட்சர்வ் நாடு அதிக சாமான்களை இன்ஃபோசிஸ் நாட்டிலிருந்து வாங்கிக் குவித்ததென்றால், அதிக எட்சர்வ் கரன்சியை விற்று இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்கி, அதன் மூலம் சாமான்களை வாங்கியிருக்கும். அப்படி அதிகமாக விற்கப்பட்டிருக்கும் எட்சர்வ் கரன்சி இன்ஃபோசிஸ் கரன்சிக் கெதிராக மதிப்பிழந்து (20-லிருந்து 30-க்கோ, 35-க்கோ) போயிருக்கும்.

கம்பெனியாக இருக்கும்போது எட்சர்வ் பி அண்ட் எல் மற்றும் பேலன்ஸ் ஷீட் போடுகிறது. எட்சர்வ் கம்பெனி ஷேரின் மதிப்பு தற்போதைய பி அண்ட் எல், பேலன்ஸ் ஷீட், மற்றும் எதிர் வரும் நாட்களில் அது வைத்திருக்கும் பிஸினஸ் திட்டங்களைக்கொண்டு கணிக்கப்படுகிறது.அதுவே எட்சர்வ் நாடாகும்போது அதனுடைய பேலன்ஸ் ஆஃப் பேமென்ட் ஸ்டேட்மென்ட் (வியாபாரம், கடன், முதலீடு இவற்றின் மூலமாக ஒரு வருடத்தில் மற்ற நாடுகளுக்கு அது தந்த பணம்/மற்ற நாடுகளிடம் இருந்து அந்த நாடு பெற்ற பணம்), எதிர் வரும் நாட்களில் அந்த நாட்டின் பொருளாதாரத் திட்டம் மற்றும் பொருளாதார நிலைமை போன்றவற்றைக் கொண்டு கரன்சியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

ஒரு கம்பெனியில் லாபத்தை அதிகரிக்க வழியில்லாமல் ஷேர் கேப்பிட்டலை (முதலீடு) அதிகரித்துக்கொண்டே சென்றால், ஷேரின் சந்தை மதிப்பு குறைந்துகொண்டே போகும். ஏனென்றால் புதிதாகப் போடும் முதலீட்டுக்குத் தேவையான ரிட்டர்ன் கிடைக்காது என்பது உறுதியாகிற பட்சத்தில் சந்தையில் அதை வாங்க ஒருவரும் விரும்பமாட்டார்கள். அதுபோல் நாட்டில் பொருளாதார வளர்ச்சியில்லாமல் கரன்சியை பிரின்ட் செய்து கரன்சி சர்க்குலேஷனை அதிகரித்துக்கொண்டே சென்றால்... கரன்சியின் மதிப்பும் குறையும்!

இன்ஃபோசிஸ் நாட்டில் நிலைமை சரியில்லை என்றால் (பொருளாதாரம், ஏற்றுமதி/இறக்குமதி) இன்ஃபோசிஸ் கரன்சியின் மதிப்பு குறையும். எட்சர்வ் நாட்டில் நிலைமை சூப்பர் என்றால் அதன் மதிப்பு கூடும். ஸ்பாட் கரன்சி டிரேடர்கள் இன்ஃபோசிஸ் கரன்சியை அதிகமாக விற்று எட்சர்வ் கரன்சியை அதிகமாக வாங்குவார்கள். எனவே எட்சர்வ் கரன்சிக் கான டிமாண்ட் அதிகமாகும். இன்ஃபோசிஸ் கரன்சிக்கான சப்ளை அதிகரிக்கும். அதிகமாக விற்கப்படுவது (சப்ளை) மதிப்பிழப்பதும் அதிகமாக வாங்கப்படுவதின் (டிமாண்ட்) மதிப்பு கூடுவதும் ஃபைனான்ஸியல் மார்க்கெட்டின் குணாதிசயம்தானே!

இவை ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வட்டி விகிதம் அந்த நாட்டு கரன்சியின் மதிப்பைப் பாதிக்கும். அது எப்படி என அடுத்த இதழில் பார்ப்போம்.



எக்ஸாட்டிக் டெரிவேட்டிவ்ஸ் டிஜிட்டல் ஆப்ஷன்ஸ்:

டபுள் நோடச் ஆப்ஷன்ஸ்: டாலரின் ரூபாய்க்கு எதிரான மதிப்பு 44-க்கு மேல் 52-க்குள்தான் இருக்கும் என நினைக்கிறீர்கள். இன்றிலிருந்து ஒரு வருடத்துக்கு டாலர் 44-க்கு மேல் 52-க்குள் மட்டும் இருந்தால் 1,000 டாலர் தருவதற்கு ரெடி என ஒரு கான்ட்ராக்ட் மார்க்கெட்டில் கிடைக்கும். அதை பிரீமியம் கொடுத்து வாங்கினீர்கள் என்றால், உங்கள் கணிப்பு சரியாகி 44-யும் 52-யும் டாலர் டச் பண்ணாமல் கடைசிவரை இருந்தால், உங்களுக்கு 1,000 டாலர் கிடைக்கும். ஏதாவது ஒரு லெவலை (44 அல்லது 52) டச் பண்ணிவிட்டால் அத்துடன் கான்ட்ராக்ட் காலாவதியாகிவிடும். நீங்கள் கொடுத்த பிரீமியத்தை முழுவதுமாக இழந்துவிடுவீர்கள். இந்த ஆட்டம் எப்பூடி?!


எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 4

ஆல் பாஸ்' பிராண்ட் நோட் புக்கைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது! காரணம் அதன் சூப்பர் குவாலிட்டி! இந்த நோட்டுப் புத்தகங்களைத் தயாரிக்கும் 'ஆர்.சி.என். நோட் புக்ஸ் லிமிடெட்'-ன் எம்.டி. சேகர். அவருக்கு தனது நோட்புக்குகளை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை.

ஒருநாள் துபாயிலிருந்து வந்திருந்த சேகரின் பால்ய நண்பர், நோட்புக்கின் தரத்தைப் பார்த்து விட்டு அசந்து போனார். 'சில சிறிய மாற்றங்களைச் செய்தால் துபாய் மற்றும் அரேபிய நாடுகளில் இதை அடித்துக்கொள்ள நோட்டே இல்லை!' என்று சேகரின் எக்ஸ்போர்ட் ஆசைத் தீயில்பிரீமியம் பெட்ரோலை ஊற்றிச் சென்றார்! நண்பர் சொன்ன மாறுதலைச் செய்யவேண்டும் என்றால் தேவையான அனைத்து மெஷினரியும் புதிதாக இம்போர்ட் பண்ணவேண்டும் என்ற நிலை சேகருக்கு!

பிஸினஸைப் பொறுத்தவரை சேகர் வேகமான ஆசாமி. ஒரே வாரத்தில் ஜப்பான், ஜெர்மன் என பல நாடுகளுக்கு போன் பேசி, மெயில் அனுப்பி, கடைசியில் இரண்டு லட்சம் டாலருக்கு மெஷினை வாங்கிவிடலாம் என கண்டு பிடித்து விட்டார். ரூபாயில் கணக்குப் போட்டுப் பார்த்தபோது சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும் என்று தெரிந்து கொண்டார்.

இதற்கிடையே துபாய்க்குப் போய்ச் சேர்ந்த அவருடைய நண்பரும் ஒரு பெரிய டிஸ்ட்ரிபியூட்டரிடம் சேகருக்கு ஆர்டர் பிடித்துவிட்டார். அந்த கம்பெனி, 'ஒரு டாலருக்கு இரண்டு நோட்டு சப்ளை பண்ணவேண்டும்' என கண்டிஷன் போட்டது. 'குறைந்தபட்சம் இரண்டு வருஷத் துக்காவது சப்ளை செய்வதாக இருந்தால்தான் கான்ட்ராக்ட் தருவோம்' என்று சொல்லிவிட்டது அந்த கம்பெனி. டாலருக்கு 50 ரூபாய் என வைத்துக்கொண்டால் ஒரு டாலருக்கு இரண்டு நோட்டு அனுப்பும்போது என்ன லாபம் கிடைக்கும் என கணக்குப் போட்டார் சேகர். ஒரு நோட்டுக்கு 5 ரூபாய் கிடைக்கும் என வந்தது. எப்படியும் ரெண்டு வருஷத்தில் பிராஜெக்ட் லாபமாகிவிடும். கவர்ன்மென்ட் வேற எப்படியும் கொஞ்சம் சலுகைகள் கொடுப்பாங்க. அதனால் உடனே களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான் என முடிவு செய்து இறங்கியும்விட்டார்.

உடனடியாக ஒரு பிராஜெக்ட் ரிப்போர்ட்டைத் தயார் செய்துகொண்டு பேங்க்குக்குப் போய் கடன் கேட்டார் சேகர். பேங்க் மேனேஜ ருக்கு சேகர் மீது நல்ல அபிப்பிராயம் உண்டு. நல்ல கஸ்டமர் என்ற வகையில் அவரிடம் இந்த எக்ஸ்போர்ட்டில் உள்ள ரிஸ்க்குகள் குறித்து சில விஷயங்களைச் சொன்னார் மேனேஜர்.

''சார் நீங்க ரெண்டு லட்சம் டாலருக்கு மெஷின் ஆர்டர் பண்றீங்க... அது வந்து சேர்றதுக்கு எப்படியும் ஆறு மாசமாகும், புரடக்ஷன் எடுக் கிறதுக்கு நாலு மாசமாகும்னு சொல்றீங்க. அதற்கப் புறம் ரெண்டு வருஷத்துல பிராஜெக்ட் லாபகரமாக நடக்கும்னு கணக்குப் போடுறீங்க. இந்த 34 மாசத்துல டாலர் விலை மேலேயும் கீழேயுமா பல தடவை போகும். அதனால வரக்கூடிய சாதக, பாதகங்களை நீங்க பிராஜெக்ட் ரிப்போர்ட்டில் கணக்கில் எடுத்த மாதிரியே தெரியலையே'' என்றார்.

ஆரம்பத்தில் சேகருக்கு இது சுத்தமாகப் புரிய வில்லை. 'கடன் தர முடியாதுன்னா முடியாதுனு சொல்லுங்க. எதுக்குப் பயமுறுத்துறீங்க' என மேனேஜரை உரிமையாகக் கடிந்துகொண்டார். மேனேஜரோ, சேகரிடம் பொறுமையாக, ''சார் இன் னைக்கு விலையில மெஷினுக்கு ஒரு கோடி ரூபாய் ஆகும். ஆனா, அந்த மெஷின் ஆறு மாசம் கழிச்சு உங்க கைக்குக் கிடைக்கிறப்போ அதே தொகைதான் இருக்கும்னு சொல்லமுடியாது. அன்றைய தேதியில டாலர் 55 ரூபாயா இருந்துச்சுன்னா உங்க மெஷின் விலை ஒரு கோடியே பத்து லட்சமாயிடும். உங்க பிராஜெக்ட் காஸ்ட் 10% அதிகரிச்சுடும். அதேமாதிரி மெஷின் வந்து சேர்ந்து நாலு மாசத்துக்குப் பிறகு புரடக்ஷன் எடுத்து எக்ஸ்போர்ட் செய்வீங்க. அப்போ டாலர் ரேட்டு 40 ரூபாயா ஆயிடுச்சுன்னா நோட்டுக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராது. டாலர் விலை இப்படி ஏறியிறங்கி உங்களோட பிராஜெக் டையே கொலாப்ஸ் செஞ்சிடவும் வாய்ப்பு இருக்கு. ஜாக்கிரதை'' என்றார்.

அப்போதுதான் சேகருக்கு பேங்க் மேனேஜர் சொன்னது கிடுகிடுவென புரிந்தது. ஆனால், அதற் காக நீண்டநாள் கனவான எக்ஸ்போர்ட் ஆசையை விட்டுவிட முடியுமா என்ன!

சென்ற இதழில் சங்கருக்கு செல்லப்பா கிடைத்தது போல சேகருடைய கம்பெனிக்கும் உள்ளூரில் வேறு ஏதாவது கம்பெனிகள் கிடைத்தால் டாலர் விலை ஏற்ற, இறக்கத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு தப்பித்துவிடலாம். ஆனால், அதுபோல் அமைவது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன!

இவர்களுக்காகத்தான் இருக்கிறது கரன்சி மார்க்கெட். பலவிதமான ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் தேவைகளிருக்கும் கம்பெனிகள் இந்த சந்தைக்கு வந்து வியாபாரம் செய்கின்றன. எதிர்வரும் காலத்தில் தங்களுக்குத் தேவையான டாலரையோ, ரூபாயையோ இந்த சந்தையில் வியாபாரம் செய் வதன் மூலம் ஃபிக்ஸ் செய்துகொள்கின்றன. இப்படிச் செய்வதின் மூலம் பிராஜெக்ட்காஸ்ட் டையும், வரவேண்டிய லாபத்தையும் காப்பாற்றிக் கொள்கின்றன.

'சரி, டாலரின் மதிப்பு மாறுது மாறுது என்கிறீர் களே, அது ஏன் மாறுகிறது? அதற்கு என்ன காரணம்?' என நீங்கள் கேட்பது தெரிகிறது. அதுகுறித்து வரும் இதழ்களில் பார்ப்போம்.



எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ்:
ரேஷியோ பார்வர்ட் வித் நாக்அவுட் கண்டிஷன்:

இன்றிலிருந்து 36 மாதத்துக்கு நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் டாலர் 48-க்கு கீழேயிருந்தால் நான் உங்களிடமிருந்து 1 டாலரை 48 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வேன். அதே தேதியில் 48-க்கு மேலே இருந் தால் நீங்கள் எனக்கு இரண்டு டாலர் 48 ரூபாய்க்குக் கொடுக்கவேண்டும். இந்த ஒப்பந்தம் எதுவரை செல்லும் என்றால்...

நாக்அவுட் கண்டிஷன்: டாலர் மதிப்பு 36 மாதத்தில் ஏதாவது ஒரு நாள் 47-ஐ தொட்டால் அன்று முதல் செல்லாது போகும்!

அதாவது, எனக்கு ஒரு ரூபாய்தான் அதிகபட்ச நஷ்டம். ஏனென்றால் 47 ரூபாயைத் தொட்டவுடன் கான்ட்ராக்ட் செல்லாது போகும். ஆனால், உங்களுக்கு டாலர் மதிப்பு 47-க்கு மேல் எவ்வளவு கூடுகிறதோ அந்த அளவுக்கு 36 மாதத்துக்கு இரண்டு மடங்கு நஷ்டமாகும். 'ரூம் போட்டு யோசிப்பாங்களோ, எப்படி ஏமாத்துறதுனு!' என்கிறீர்களா?!




உலகத் தலைநகரம் மும்பை!

இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை வருங்காலத்தில் உலக தலைநகரமாக மாறும் என்று சொல்லி இருக்கிறது ஃபோர்ப்ஸ் இதழ். தொழில்துறையின் வளர்ச்சி, உலகின் பெரிய சினிமா துறை, நடுத்தர மக்களின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி போன்றவை முக்கிய காரணம் என்கிறது இந்த இதழ். பெங்களூரும், ஹைதராபாத்தும் அதன் சாஃப்ட்வேர் வளர்ச்சி காரணமாக உலகின் முக்கிய நகரங்களாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது ஃபோர்ப்ஸ்.




எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 3

கரன்சி சந்தையானது ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், தனிநபர்கள் என எல்லா தரப்புக்கும் பயன்படக்கூடியது என்பதை கடந்த இதழில் பார்த்தோம்... இந்த இதழில் கரன்சியின் விலை மாறுதல் எப்படி ஒரு தனிநபரைப் பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்...

சங்கருக்கு ஒரே பையன்... மிடில் கிளாஸ் ஃபேமிலியாக இருந்தாலும், கடனை உடனை வாங்கி பையனை நன்றாகப் படிக்க வைத்தார். அவனும் படித்து முடித்து வேலை கிடைத்து அமெரிக்கா போய் விட்டான். பையன்தான் நன்றாகச் சம்பாதிக்கிறானே, அவன் பெயரில் ஒரு வீட்டை வாங்கிப்போட்டால் பிற்காலத்தில் அவனுக்கு உதவுமே என்ற எண்ணம் வந்தது சங்கருக்கு! பையனிடம் கேட்டபோது அவன் தன்னால் மாதம் 2,000 டாலர் அனுப்பமுடியும் என்றான். டாலருக்கு ஐம்பது ரூபாய் என்று கணக்கு வைத்தால் மாதம் ஒரு லட்சம் வருகிறது. அதனால் ஒரு லட்சம் மாதத்தவணை வருகிற மாதிரி ஒரு தொகையை வங்கியிலிருந்து கடனாக வாங்கி, மீதிக்கு கைக்காசு, சேமிப்புகளைப் போட்டு சரிக்கட்டி ஒரு வீட்டை வாங்கிவிட்டார் சங்கர்.

முதல் மாசம் பையன் 2,000 டாலர் அனுப்புகிறான். பேங்க்கில் போய்ப் பார்த்தால் ஒரு லட்சத்து நாலாயிரம் ரூபாய் கிரெடிட் ஆகியிருக்கிறது! டாலர் மதிப்பு 52 ரூபாய் ஆகிவிட்டதால் 4,000 ரூபாய் கூடுதாலாக வந்திருக்கிறது. தவணையைக் கட்டிவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பினார் சங்கர்.

அடுத்த மாதம் பேங்க்குக்குப் போய்ப் பார்த்தால் 90,000 ரூபாய்தான் கிரெடிட் ஆகியுள்ளது! என்ன ஏதென்று விசாரித்தால், 'டாலர் 45 ரூபாய் ஆகிவிட்டது, அதனால்தான்' என்றார்கள் பேங்க்கில். 'என்னடா இது, 10,000 ரூபாய் துண்டு விழுகிறதே' எனக் கவலை பிறக்கிறது சங்கருக்கு. அடுத்த மாதம் கரெக்டாக ஒரு லட்சம் கிரெடிட் வருகிறது. 'அப்பாடி தப்பிச்சேன்' என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். ஆனாலும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கிடைக்குமோ என்று தெரியாமல் தவிக்க வேண்டி யதாகிவிடுகிறதே இதற்கு என்ன செய் வது என்ற கவலை வந்துவிட்டது சங் கருக்கு!

பேங்க்கை விட்டு வெளியே வந்த போது அவருடைய நண்பர் செல்லப்பா எதிர்ப்பட்டார். செல்லப்பா தனது பையனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார். அவனு டைய செலவுக்காக மாதாமாதம் 2,000 டாலர் அனுப்பி வருவதாக சங்கரிடம் சொல்கிறார். அவருக்கும் பிரச்னை. பையனுக்குப் பணம் அனுப்பும்போது ரூபாயின் மதிப்பு குறைந்தால் சிலமாதங்கள் கையைக் கடித்துவிடுகிறது.

இரண்டு பேரும் தங்களது பிரச்னையைப் பேசிக்கொண்டிருக்கும்போதே சங்கருக்கு ஒரு பொறி தட்டுகிறது. 'செல்லப்பாவுக்குத் தேவை 2,000 டாலர். நமக்குத் தேவை 1,00,000 ரூபாய். அமெரிக்காவில் தன்னுடைய மகன் செல்லப்பா மகனிடம் 2,000 டாலர் கொடுத்துவிடுவது. இங்கே செல்லப்பாவிடம் தான் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொள்வது. இரண்டு தரப்புக்கும் எந்த ஏற்ற, இறக்கமும் இல்லாமல் கரெக்ட்டான தொகை கிடைத்துக் கொண்டிருக்குமே...'

வீட்டுக்குப் போய் மகனுக்கு உடனே போன் போட்டு இந்த ஐடியாவைச் சொன்னார் சங்கர். ஆனால் பையன், 'அது கூடாது. சட்ட விரோதமான செயல்' என்று சொல்லிவிடுகிறான். சங்கருக்கு ராத்திரி முழுக்க தூக்கமே வரவில்லை. இரவு முழுவதும் யோசித்து கடைசியாக ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டார். அந்த ஐடியா இதுதான்...

செல்லப்பாவுக்கு டாலர் விலை ஏறக்கூடாது. சங்கருக்கோ இறங்கக் கூடாது. அதனால் இன்றைய விலை யில் சங்கரும் செல்லப்பாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இனிவரும் 9 மாதத்துக்கு டாலர் 50 ரூபாய்க்கு மேலே போனால் மகன் அனுப்புவதில் அதிகம் வரும் பணத்தைச் செல்லப்பாவுக்குக் கொடுத்துவிடுவது. 50 ரூபாய்க்குக் கீழே போனால் செல்லப்பா தன்னிடம் மிச்சமாகும் பணத்தைச் சங்கருக்குக் கொடுத்துவிடுவது. ஆக மொத்தத்தில் இரண்டு பேருக்கும் டாலர் ஏறினாலும் இறங்கினாலும் நஷ்டம் கிடையாது.

இந்த ஐடியாவை சங்கர் செல்லப்பாவிடம் சொன்னதும் அவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். அன்றிலிருந்து இரண்டு பேரும் மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் பேங்க்குக்கு ஒன்றாகச் சென்று அன்றைய டாலர் நிலவரத்தை வைத்து வந்த பணத்தையும் அனுப்பவேண்டிய பணத் தையும் கணக்கிட்டு வேலையை முடித்துக் கொள் கிறார்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்...

ஒருவேளை ஒப்பந்தம் போட்ட ஒன்பது மாதத்தில் ஐந்தாறு மாதங்கள் டாலர் மதிப்பு ஐம்பது ரூபாயை விட அதிகமாக இருந்தால் செல்லப்பாவுக்கு சங்கர் அதிகப் பணம் கொடுத்திருப்பாரே. அதுவே ஐம்பது ரூபாயை விட குறைவாக இருந்தால் சங்கருக்கு செல்லப்பா அதிக பணம் கொடுத்திருப்பாரே என்று தோன்றியிருக்கும் அல்லவா?

ஒன்பது மாதம் முடிந்த பிறகு கணக்குப் போட்டுப் பார்த்தால் யாராவது ஒருவர் இன்னொருவருக்கு அதிக பணம் கொடுத்திருக்கத்தான் செய்திருப்பார். ஆனால், அப்படி இந்த கணக்கினைப் பார்ப்பதே தவறு. ஒப்பந்தம் செய்துகொண்டபோது இருவரின் கொள்கை என்ன? எதிர்வரும் ஒன்பது மாத காலத்துக்கு டாலரை 50 ரூபாய்க்குக் குறையாமல் சங்கரும், 50 ரூபாய்க்கு மிகாமல் செல்லப்பாவும் பேங்க்கில் மாற்றிக்கொள்வது என்பதுதான். அது நிச்சயமாக நிறைவேறியதா இல்லையா?

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்... இதுபோன்ற ஒப்பந்தங்கள் லாபம் அடைவதற்காகப் போடப்படுபவை அல்ல. எதிர்கால விலை மாற்றங்களால் உண்டாகக்கூடிய நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகப் போடப்படுபவைதான். எனவே ஒப்பந்த காலம் முடிந்து விலைகள் தெளிவாகத் தெரிந்தபின் லாப-நஷ்டக் கணக்குப் பார்த்து பெருமூச்சு விடக்கூடாது.

சங்கருக்கு அதிர்ஷ்டவசமாக அதே அளவு தொகைக்கு அதே மாதிரியான பிரச்னைகளுடன் இருந்த செல்லப்பா கிடைத்துவிட்டார். ஆனால், எல்லோருக்கும் அதே போல ஆட்கள் கிடைப் பார்களா? அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பது தான் கரன்சி சந்தை. நிறைய சங்கர்களும் செல்லப் பாக்களும் சந்தையில் இருப்பார்கள். ஆனால், ஒரு வரை ஒருவர் நேரடியாகச் சந்திக்க முடியாது. அது ஒன்றுதான் வித்தியாசம்!

தனிநபர்களுக்கே எதிர்கால விலைமாறுதலால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என் றால் நிறுவனங்கள் எந்த அளவில் பாதிக்கப்படும் எனப் பாருங்கள்... இதுபோன்ற ஒப்பந்தங்கள் நிறுவனங் களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். அதுகுறித்து அடுத்த இதழில் பார்ப்போம்...




எக்ஸாடிக் ஆப்ஷன்ஸ்:

நாக்அவுட்/ நாக்இன் ஆப்ஷன்ஸ்:

இந்த ஆப்ஷனில் கான்ட்ராக்ட்கள் கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைக்கும். எப்படி? இன்றைய டால ரின் மதிப்பு ரூபாய் 50. இன்றிலிருந்து ஒரு வருஷ காலத்துக்கு மாதா மாதம் முதல் தேதி 10,000 டாலரை 50 ரூபாய்க்கு வாங்கும் உரிமை (ஆப்ஷன்) உங் களுக்கு அளிக்கப்படுகிறது. மார்க்கெட்டில் டாலர் விலை 50-ஐ விட மேலேயிருந்தால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 50-ஐ விடக் குறைவாக இருந்தால் வாங்கவேண்டியதில்லை. இந்த ஒப்பந்தத்துக்காக நீங்கள் பிரீமியம் (பணம்) ஒன்றும் தரவேண்டாம்.

ஹை இது நன்றாயிருக்கிறதே! டாலர் விலை 50-க்கு மேல் இருந்தால் லாபம் பண்ணலாமே என நினைக்காதீர்கள்! பின்வரும் கண்டிஷன்களும் இந்த கான்ட்ராக்ட்டில் உண்டு. உங்களுடைய 50 ரூபாய்க்கு டாலர் வாங்கும் உரிமை டாலரின் மதிப்பு 50 ரூபாய் 50 பைசா செல்லும் வரைதான் செல்லுபடியாகும் (நாக்அவுட்). இந்த ஒரு வருஷ காலத்தில் ஏதாவது ஒரு நாள் டாலர் 50.50-ஐ தொட்டால் உங்கள் உரிமை ரத்தாகும். மேலும் டாலர் விலை 50-லிருந்து கீழே யிறங்கி 49.50-ஐ இந்த ஒரு வருடத்தில் தொட்டால் (நாக்இன்). அன்றிலிருந்து நீங்கள் நான் (என்னுடைய ஆப்ஷன்) கொடுத்தால் 50.50-க்கு மாதா மாதம் 10,000 டாலரை வாங்கிக்கொள்ள வேண்டும். பெட்டு எப்புடி?!

அதாவது நான் 50-லிருந்து 50.50 வரை நஷ் டப்பட ரெடி. அதிகபட்ச நஷ்டம் எனக்கு 0.49 காசு மட்டும் (10,000 டாலர் ஜ் 12 மாதம்) . லிமிட்டெட் நஷ்டம் எனக்கு. ஆனால், நீங்கள் சிக்கினால் 49.50-லிருந்து 35 போனால் கூட 50.50-க்கு 10,000 டாலரை மாதா மாதம் ஒரு வருஷத்துக்கு வாங்கிக் கொண்டே இருக்கவேண்டும் அன்லிமிட்டெட் நஷ்டம் உங்களுக்கு!

கரன்சியிலும் கலக்கலாம் - 2

அட என்ன சார் நீங்க, ஏற்கெனவே வியாபாரம் செய்ய ஷேர், ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ், கமாடிட்டீஸ் ஃப்யூச்சர்ஸ்னு ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்குது... இப்ப கரன்சி பற்றி தெரிஞ்சு என்ன ஆகப்போகுது'' என்று கேட்கிறீர்களா? அதற்கான தேவை வந்துவிட்டது! கரன்சி மார்க்கெட்டில் பல விதமான நோக்கத்துடன் வியாபாரம் செய் யலாம். ஏற்றுமதி செய்பவர், இறக்குமதி செய்பவர், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர், ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்பவர் என பலதரப்பட்டவர்களுக்கும் ஏற்ற இடம் இது! ஒவ்வொருவருக்கும் இது எப்படிப் பயன்படக்கூடும் என்பதை முதலில் பார்க்கலாம்... 

ஏற்றுமதியாளர்



பொதுவாக எல்லா ஏற்றுமதியாளர்களும் அந்நியச் செலாவணியில்தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக ஒருவர் டீ-ஷர்ட்டை 40 ரூபாய்க்குத் தயாரித்து, அமெரிக்க கம்பெனி ஒன்றுக்கு 'ஒரு ஷர்ட் ஒரு டாலர்' என்ற விலைக்கு ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒப்பந்தப்படி மாதம் ஒன்றுக்கு 10,000 டீ-ஷர்ட் வீதம் ஒரு வருடத்துக்கு அவர் அனுப்பவேண்டும். அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 50 ரூபாய் என இருக்கிறது என்றால், அவருடைய லாபம் ஒரு டீ-ஷர்ட்டுக்கு 10 ரூபாய்.

சரக்கு கையில் வந்த பிறகே அமெரிக்க கம்பெனி பணத்தை அனுப்பும். அவரும் மாதாமாதம் டாலரைப் பெற்று அதனை ரூபாயாக மாற்றச் சென்றால் அன்றைய டாலரின் மதிப்பில்தான் மாற்ற முடியும். அவர் ஒப் பந்தம் போட்ட சமயத்தில் உள்ள டாலரின் மதிப்புக்கும், டாலரை ரூபாயாக மாற்றப்போகும் சமயத் தில் உள்ள மதிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் டாலரின் மதிப்பு கூடினால் ஏற்று மதியாளருக்கு லாபம். குறைந்தால் நஷ்டம்! இதனால், ஏற்றுமதியாளரின் லாபம் டாலரின் மதிப்பின் போக்குக்குத் தகுந்தாற் போல் மாறிக்கொண்டேயிருக்கும். 

லாபம் கூடிக் குறைந்தால் பரவாயில்லை. சிலசமயம் டாலரின் மதிப்பு அளவுக்கு அதிகமாகக் குறைந்தால் முதலுக்கே மோசமாகிவிடவும் (டீ-ஷர்ட்டின் உற்பத்தி விலைக்குக் கூட கட்டுப்படியாகாமல் போகவும் செய்யும்) சான்ஸ் இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவுடன் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக்மென்டில் அந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் டாலரை ஒரு விலையில் விற்று லாபத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

இறக்குமதியாளர்

இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் இறக்குமதி ஆர்டரை பிளேஸ் செய்யும் நாளுக்கும் பொருள் வந்திறங்கி டாலரில் பணம் கொடுக்கும் நாளுக்கும் இடையே உள்ள காலத்தில் டாலரின் மதிப்பு கூடினால் சரக்கின் விலை அதிகமாகிவிடும். அவ்வாறு சரக்கின் விலை அதிகமாவது லாபத்தைக் குறைத்துவிடும். மிக அதிகமான மதிப்பு யர்வு நடக்கும்போது இறக்குமதி செய்யும் பொருளை விற்க முடியாமல் போய்விடும். இதைத் தவிர்க்க இறக்கு மதியாளர் ஆர்டரை பிளேஸ் செய்தவுடன் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் மார்க்கெட்டில் அந்த ஆர்டரில் உள்ள டாலரை வாங்கி வைத்துக்கொண்டால் அவரால் டாலரின் மதிப்பு மாறுபாட்டின் மூலம் வரும் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும்.

சாதாரண மனிதர்கள்

''அடப் போங்க சார்... நான் ஏற்றுமதியும் செய்யவில்லை, இறக்குமதியும் செய்யவில்லை... எனக்கு எதற்கு இந்த மார்க்கெட்?'' என ஒருவர் கேட்டால் அதற்கும் பதிலிருக்கிறது.

சாதாரண மனிதர்களை ஃபாரெக்ஸூடன் சம்பந்தம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். 

சம்பந்தம் உள்ளவர்கள் என்பது மகன், மகள் என ஃபாரினில் வேலைபார்த்து பணம் அனுப்பும் உறவினர்கள் உள்ளவர்கள். இவர்களை ஏற்றுமதியாளர்களுக்குச் சமமாகக் கருதலாம். ஏனெனில் குறிப்பிட்ட இடைவெளியில் டாலரில் பணம் இவர்களுக்கு வந்துகொண்டிருக்கும். மற் றொருவகை மகன்/மகளை ஃபாரினில் படிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள். இவர்களை இறக்குமதி யாளர்களுக்குச் சமமாகக் கருதலாம். இவர்கள் குறிப் பிட்ட இடைவெளியில் டாலரை வாங்கி மகன்/மகளுக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

சம்பந்தம் இல்லாதவர்கள் ஏன் இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யவேண்டும் எனக் கேட்கிறீர்களா?. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்பவரா? உங்களுக்கும் இதில் சம்பந்தம் உள்ளதே! எஃப்.ஐ.ஐ. முதலீடுகள் எப்படி சந்தை நிலையை மாற்றியமைக்கின்றன? எஃப்.ஐ.ஐ. டாலரில் பணத்தைக் கொண்டுவந்து டாலரை விற்று ரூபாயாக மாற்றி ஷேர்களை வாங்குகின்றன. ஷேரில் லாபம் பார்த்து அவற்றை விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு போகும்போது ரூபாயை விற்று டாலரை வாங்குகின்றன. இதனால் எஃப்.ஐ.ஐ. முதலீட்டுக்கு டாலர் வரும்போது டாலர் மதிப்பு குறைகிறது. அதாவது அதிகமாக டாலர் விற்கப்படுகிறது. ரூபாய் வாங்கப்படுகிறது. அதிகமாக விற்கப்படுவது எந்தச் சந்தையிலும் மதிப்பிழக்கும். அதுபோல அதிகமாக வாங்கப்படும் சரக்கு மதிப்பு பெறும். 

எனவே டாலரில் முதலீடு வரும்போது ரூபாய் மதிப்பு கூடும். முதலீடு திரும்பிச்செல்லும்போது ரூபாயின் மதிப்பு குறையும். எனவே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் எஃப்.ஐ.ஐ. முதலீடு அதிகமாக வரும்போது உங்கள் பங்குகளின் விலை ஏறும். அந்தச் சூழ்நிலையில் ரூபாய் மதிப்பு கூடும். அப்போது டாலரை ஃப்யூச்சரில் குறைந்த விலையில் வாங்கி வைக்கலாம். எஃப்.ஐ.ஐ. முதலீடு வெளியேறும்போது டாலரின் விலை கூடும். அப்போது டாலரை ஃப்யூச்சரில் விற்று சம்பாதிக்கலாம்.

''அட, நான் பங்குச் சந்தையில் கூட முதலீடு செய்யறதில்லீங்க. இனிமே பண்ணலாமானு யோசிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கெதுக்கு சார் இது!'' என்கிறீர்களா? உங்களுக்கும் ஏற்ற சந்தை இதுதான்! ஏனென்றால் டாலர்/ரூபாய் மதிப்பு கண்டபடி ஏறியிறங்குவதில்லை (less volatile). மேலும், கரன்சி ஃப்யூச்சரில் வியாபாரம் செய்ய குறைந்தபட்சம் தேவைப்படும் தொகை 1,000 டாலர் மட்டுமே! அதாவது 48,130 ரூபாய். இதற்கான அதிகபட்ச மார்ஜின் தொகை 4,813 ரூபாய்தான். அதுவே பங்குச் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வியாபாரம் செய்யவேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும்! இன்னொரு விஷயம் பங்குச் சந்தை போல டாலரோ, ரூபாயோ ஏறி இறங்குவது கிடையாது. 

இப்போது சொல்லுங்கள் டாலர்/ரூபாய் ஃப்யூச்சர்ஸ் சந்தையில் வியாபாரம் செய்வது லாபமும் சுலபமானதும் அல்லவா?

சூப்பர் பிக்-அப்..!


கரன்சி டெரிவேட்டிவ்ஸ் வியாபாரம் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் 2008-லும், எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் அக்டோபர் 2008-லும் தொடங்கி நடந்து வருகிறது. தொடங்கிய தேதியிலிருந்து இன்றுவரை கணக்கிட்டால் தினசரி ரூபாய் 4,250 கோடி ஆவரேஜ் வியாபாரம் நடந்து வருகிறது. குறிப்பாகச் சொன்னால் தொடங்கியதில் இருந்து 231 நாட்கள் டிரேடிங் நடந்துள்ளது. இந்த 231 நாட்களில் டாலரின் ரூபாய்க்கு எதிரான மதிப்பு ஸ்பாட் மார்க்கெட்டில் குறைந்தபட்சம் ரூபாய் 43.79 ஆகவும் அதிகபட்சம் ரூபாய் 52.09 ஆகவும் இருந்திருக்கிறது. 

எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ்!

கரன்சி டெரிவேட்டிவ்ஸ் என்றவுடன் ஏற்றுமதியாளர்கள் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங்கில் கடுமையான நஷ்டத்தை அடைந்தார்கள் என சென்ற வருடம் பேப்பரில் படித்தது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அதனால் ரிஸ்க் இதில் அதிகமாக இருக்குமோ எனச் சந்தேகம் வருவது இயல்பே. 

அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த வியாபாரத்தில் பெரும்பான்மையான கான்ட்ராக்ட்கள் ஸ்வாப்ஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ் வெரைட்டியைச் சேர்ந்தது. எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ் என்பது ஒரு கைதேர்ந்த ரிஸ்க் எடுக்கக் தயாரான டிரேடருக்கான விஷயம். எக்ஸாட்டிக் டெரிவேட்டிவ்ஸ் பலவிதம். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்... சுலபமாகப் புரிவதற்காக டாலர்/ரூபாய் கான்ட்ராக்ட்கள் உதாரணமாக்கப்பட்டுள்ளது. டாலர்/ரூபாயில் எக்ஸாடிக் கான்ட்ராக்ட்கள் நடைமுறையில் இல்லை. மற்றும் சட்டப்படி கூடாது. தனிநபர்களாக இந்த கான்ட்ராக்ட்களில் வியாபாரம் செய்வது கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் விழுவதற்குச் சமம். ஆனாலும் இவை ரிஸ்க் டிரேடருக்கான ஒரு சுவையான விஷயம்!

இந்த இதழில் காரிடார் கான்ட்ராக்ட்கள்: உதாரணத்துக்கு இந்த கான்ட்ராக்டை 3,000 ரூபாய் கொடுத்து வாங்குபவருக்கு வாங்கும் தேதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 50-ஐத் தொட்டால் 10,000 ரூபாயும் 38- ஐத் தொட்டால் 5,000 ரூபாயும் விற்பவர் கொடுப்பார். இவை இரண்டும் நடக்காவிட்டால் அந்த கான்ட்ராக்ட்டினை வாங்கக் கொடுத்த தொகை அம்பேல்!

எச்சரிக்கை!

இந்தத் தொடரில் கரன்சி வியாபாரம் எனச் சொல்லப்படுவது அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் அங்கீகாரத்துடன் எம்ஸிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக் மென்ட்டில் நடைபெறும் டாலர்/ரூபாய் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்டையே குறிப்பிடுகிறது. 

ஃபெமா சட்டத்தின்படி கரன்சி ஸ்பாட் மார்க் கெட்டில் அனுமதி பெற்ற ஏற்றுமதி/இறக்குமதிக்கு சம்பந்தமில்லாத இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்தியர் வியாபாரம் செய்யக்கூடாது. எனவே, ஸ்பாட் மார்க்கெட்டில் யாராவது உங்களுக்கு வியாபாரம் செய்து சம்பாதித்துத் தருகிறேன் என்று சொன்னால் நம்பி ஏமாந்துவிடவேண்டாம். இப்படிச் செய்வது சட்டப் படி தடைசெய்யப்பட்டிருப்பதால் உங்களுக்குப் பண நஷ்டம் ஏற்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கைக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்! அதேபோல மேலே குறிப்பிட்டுள்ள பங்குச் சந்தைகளில் வியாபாரம் செய்யும்போதும் அந்த பங்குச் சந்தையின் டிரேடிங் மெம்பர்களிடம் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். 'வேறு இடத்தில் வியாபாரம் செய்து தருகிறேன்' என்று யாராவது சொன்னால் அது தவறு. அந்த மாதிரி வியாபாரத்தில் பணம் போட்டு ஏமாந்து நிற்க வேண்டாம்!




எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 1

அடிக்கடி நமது காதுகளைக் கடந்துபோகிற ஒரு வார்த்தைதான் அந்நியச் செலாவணி. இதற்கு மேல் நாம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளப் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இனி அப்படி இருக்கமுடியாது. அதுவும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களாக இருந்துகொண்டு கரன்சி, ஃபாரின் கரன்சி, ஃபாரெக்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்நியச் செலாவணி குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி! 

'லோக்கல் செலாவணிக்கே வழியில்லை... பிறகு எங்க சார் அந்நியச் செலாவணியை மோசடி பண்றது...' என ஒரு சினிமாவில் காமெடி டயலாக் வரும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் லோக்கல் செலாவணிக்கு வழிசெய்யவேண்டும் என்றாலே, கொஞ்சமாவது அந்நியச் செலாவணி பற்றித் தெரிந்திருக்கவேண்டும். போதாக்குறைக்கு 'கரன்சி டெரிவேட்டிவ்ஸ் (ஃப்யூச்சர்ஸ்) டிரேடிங்' இந்தியாவில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட, இப்போது ஜம்மென்று வியாபாரம் நடந்து வருகிறது!யார் யார் இந்த வியாபாரத்தைச் செய்வார்கள்? யாருக்கு இந்த வியாபாரம் அவசியம் என்றால் ஒரே விடை அனைவருக்கும் என்பதுதான்! நீங்கள் வண்டியில் நிரப்பும் பெட்ரோலின் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் எப்போதும் 45 டாலருக்கு விற்கிறது என வைத்துக்கொண்டால், ஒரு டாலரின் மதிப்பு 50 ரூபாயாக இருக்கும்போது பெட்ரோலின் விலை அதிகமாகவும், 35 ரூபாயாக இருக்கும்போது விலை குறைவாகவும் இருக்கும் என்பதைச் சுலபமாகப் புரிந்துகொள்வீர்கள். அதுமாதிரி நீங்கள் வாங்கும் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் என எண்ணற்ற தினசரி பயன்பாட்டு விஷயங்களின் விலை டாலரின் மதிப்பைச் சார்ந்தே இருக்கிறது. இந்த விஷயங்களில் தனிநபராகிய நீங்கள் இறக்குமதியாளராக அந்நியச் செலாவணியின் மதிப்பு மாற்றத்தின் பாதிப்பை உணருகிறீர்கள். ஒரு ஏற்றுமதியாளர் எப்படி இந்த விலை மாற்றங்களால் பாதிக்கப்படுவார் எனப் பார்ப்போம். ஒரு பனியன் ஏற்றுமதியாளர் ஒரு டீ-ஷர்ட்டை 40 ரூபாய் அடக்கவிலையில் தயாரித்து 50 ரூபாய்க்கு விற்று 10 ரூபாய் லாபம் பெற நினைக்கிறார். ஒரு ஃபாரின் கம்பெனி அவரிடம் விலை பேசி ஒரு வருடத்துக்கான சப்ளை செய்யும் கான்ட்ராக்டைப் போடுகிறது. அந்த கான்ட்ராக்ட்டில் கையெழுத்திடும்போது டாலரின் மதிப்பு 50 ரூபாய் என இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1,000 டீ-ஷர்ட்களை சப்ளை செய்யவேண்டும், சரக்குக் கையில் கிடைத்ததும் பணம் என்பது கண்டிஷன்! சப்ளை ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் டாலரின் மதிப்பு 35 ரூபாய் என ஆகிவிட்டால் என்னவாகும்? உற்பத்தி விலையான 40 ரூபாய்க்கும் குறைவாக 35 ரூபாய்க்கு சரக்கை விற்றதால், ஒரு டீ-ஷர்ட்டுக்கு 5 ரூபாய் நஷ்டம்! இந்த நஷ்டத்தை அவர் எப்படிச் சரிசெய்யலாம்? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது! இதுபோன்ற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக வந்திருப்பதுதான் 'கரன்சி டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங்.' இனி வரும் இதழ்களில் அது குறித்து ஏ டூ இசட் பார்க்கப் போகிறோம்.

Saturday, December 4, 2010

Jeevan Saral

Jeevan Saral is a versatile insurance plan from Life Insurance Corporation of India with features of conventional plans and flexibility of unit linked plans.

It provides:

  • Higher insurance cover
  • Smooth returns
  • Flexibility and liquidity
You are provided the freedom to choose the premium you want to pay. Once premium is chosen Insurance coverage and the maturity benefit is derived from it.


Salient Features

  1. Maturity benefits : Maturity Sum Assured (MSA) + Loyalty additions
  2. Death benefit: 250 times of the basic monthly premium + Return of premium paid (excluding 1st year premium) + Loyalty additions.
  3. Loyalty addition: will be declared after the policy has been in full force for at least 10 years.
  4. Auto cover: If the policy is in force for more than three years, the risk coverage will continue for another 12 months even if the premiums are not paid in that period.
  5. Surrender charge: No surrender charge will be deducted from policies surrendered after 5 years.
  6. Partial surrender: is available after 3 years and provides a smooth return on your needs.